செட்டிநாடு பாவக்காய் புளி குழம்பு

தேவையான பொருட்கள்
நறுக்கிய பாகற்காய் – 1 கப்
புளி -  நெல்லி அளவில் - 2 உருண்டை
சின்ன வெங்காயம் – 100 gram
பூண்டு – 12 பல்
தக்காளி -2
சாம்பார் தூள் - 1 டேபிள்ஸ்பூன் (குவித்து எடுக்கவும்)
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
தேங்காய் - 2 மே.க.
வெல்லம் – சிறிது

வறுக்க வேண்டியது
மிளகாய் -5
க.பருப்பு - 1 தே.க
மல்லி - 1 தே,க
சோம்பு - 1/2 தே.க
வெந்தயம் – சிறிது

தாளிக்க வேண்டியது
நல்லெண்ணெய் - 5 மே.க
கடுகு - 1/4 தே.க
சீரகம் - 1/2 தே.க
பெருங்காயம் - சிறிது

செய்முறை:-
பாகற்காயை சிறிது உப்பு, புளி மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 20 நிமிடங்கள் ஊறவிடவும்.
வருக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வறுத்து விட்டு தேங்காய் துருவல் - 2 மேசைகரண்டி சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை உரித்து வைத்துக் கொள்ளவும்.  தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் நல்லெண்ணையை விட்டு சூடானதும் கடுகு போட்டு பொரியவிடவும். கடுகு வெடித்தவுடன் தாளிப்புக்கு தேவையான மற்ற பொருட்களையும் சேர்த்து தாளிக்கவும் இப்பொழுது  அடுப்பை சிறு தீயில் வைத்துக் கொள்ளவும். இல்லையெனில், வெந்தயம் கருகி கசக்கும்). வெந்தயம் இலேசாக சிவந்தவுடன், வெங்காயம், தக்காளி, பூண்டையும் சேர்த்து வதக்கவும். இத்துடன் கறிவேப்பிலையையும் போட்டு சிறிது வதக்கி,  அதனோடு பாகற்காயை சேர்த்து வதக்கவும். பாகற்காய் நன்கு வதங்கிய பின் அதில் மஞ்சள் பொடி, சாம்பார் பொடி (மல்லிவிதை, கடலைப்பருப்ப்பு, மிள்காய்வத்தல்-2  இவற்றை வறுத்து பொடி செய்து பயன்படுத்தினால் சிறப்பு) ஆகியவற்றைப் போட்டு நன்றாகக் கிளறி விடவும்.

பின்னர் புளித்தண்ணீரைச் சேர்த்து கொதிக்க வைக்கவும் குழம்பில்  பாகற்காய் நன்கு வெந்த பின் அரைத்து வைத்த கலவையை சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.

குறிப்பு:-

பாகற்காய் கசக்கும் என்று சிலர் வெள்ளத்தை சேர்ப்பார் அவ்வாறு செய்வதனால் பாகற்காய் பயன்படுத்துவதே பயனில்லாமல் போய்விடும். புளியும்  காரமும் சேரும்போது பாவக்காயின் கசப்பு கொஞ்சம் குறைந்துதான் இருக்கும்.