சரும வியாதிகளை குணப்படுத்த சீமை அகத்தி

தாவர விளக்கம்

மூலிகையின் பெயர் : 

சீமைஅகத்தி

ஆங்கிலப் பெயர்: 

CASSIA ALATA

வேறுபெயர்கள்: 

மெழுகவத்திப் புதர்மெழுகுவத்திப் பூ, காட்டுச் சென்னா

தாவரக்குடும்பம்: 

FABACEAE,(CAESALPINACEAE)

அடையாளம்: 

சீமை அகத்தி  தமிழ் பரவலாக காணப்படக்கூடியது. மண் வளமும் ஈரப்பதமும் உள்ளஇடத்தில் நன்கு வளரும். இது ஆற்றுப்படுகைகளில் அதிக உயரமாக வளமுடன் வளரும்.இது ஆறு அடி முதல் 12 அடி வரை வளரக்கூடியது. இது ஒரு புதர் போன்ற சிறு மரம். வெட்ட வெட்டதழைத்து வளரும். இதன் இலை எதிர் அடுக்கில் அமைந்திருக்கும். இலை 50 -80 செ.மீ. நீளம் உடையது. இது அழகுச் செடியாகவும்வளக்கப்படுகிறது. இதன் பூக்கள் மெழுகுவத்தி வைத்தால் போன்றுமஞ்சள் நிறமாக கொத்தாக அழகாக வளர்ந்திருக்கும். தூங்குமூஞ்சி மரம் போன்று இதன் இலைகள் இரவில் மூடிக்கொள்ளும். பூக்கள் உதுர்ந்து நீண்ட காய்கள் இருபக்கதுதிலும்அடுக்காகக் காய்க்கும். இதன் விதைகள் நீள் சதுர வடிவில் அமைந்திருக்கும். விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

 

மருத்துவக் குணங்கள்: 

சீமைஅகத்திச் செடியின் இலைகள் அதிகமாக நாட்டு மருத்துவத்திற்குப் பயன்படுகிறது.தோல் வியாதிகளைக் குணப்படுத்துகின்றது. வண்டுகடி, படர்தாமரை, சொறிசிறங்கு, கற்பப்பை கோளாறுகள் பாக்டீரியா, பூஞ்சைகளைக் கொல்லவும், இரத்த அழுத்தம் குறைவதைக் குணப்படுத்தவும், வயிற்றுவலி, காய்ச்சல், ஆஸ்த்துமா, அல்சர், பாம்புக்கடி, சிறுநீர் கடுப்பு, நுரையீரல் நோய்கள், இரத்த சோகை, மாதவிடாய் சம்பந்தமான நோய்கள், மேலும் மேக நோயான சிபிலிஸ் போன்றவைகளையும் குணப்படுத்தும்.

வண்டு கடியைக் குணப்படுத்த குறிப்பிட்டஅளவு புதிதாகப் பச்சையாக உள்ள இலையைபறித்து எலுமச்சஞ்சாறுடன் சேர்த்து நன்குஅரைத்து வண்டு கடிமீது காலையும்  மாலையும்  தடவினால் விரைவில் குணமடையும்.

சீமைஅகத்திச் செடியின் மஞ்சள் பூக்களைப் பறித்து கசாயம் வைத்துக் கொடுக்க சிறு நீர் கோளாறுகள் நீங்கி தடையின்றி வெளியேறும்.

சீமைஅகத்தி பட்டையை எடுத்து ஊரவைத்து கசாயமாகக் காய்ச்சி வடிகட்டிதினம் காலை, மாலை இரண்டு வேளை உட்கொண்டால் மேக வியாதிகள் குணமடையும், வலியைப் போக்கும், மலக் கழிவு இலகுவாக வெளியேறும்.

படர் தாமரையைப் போக்க உடனேபறித்த சீமை அகத்தி இலைகள் அறைத்து அதற்கு சமனெடை தேங்காய்எண்ணெயில் சேர்த்துத் தினந்தோறும்இரண்டு தரம் அழுத்தித் தேய்க்க குணமடையும்.

இதன் இலை, பூ, விதை ஆகியவற்றை நீரிலிட்டு 15 நிமிடம் வரை நான்கு கொதிக்கவைக்கவேண்டும், பின் ஆறவைத்து தினமும் மூண்று வேலையும் உள்ளுக்கு குடிக்க வயிறு கோளாறுகள் குணமாகும்.

கற்பிணிப்பெண்கள் இதனை அதிகம் உள்ளுக்கு எடுத்துக்கொள்ள கூடாது, அல்லது தவிர்த்து வேறு மூலிகையை பயன்படுத்தலாம்.