சசிகலா அதிமுக போதுசெயலாலாராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா கடந்த 5–ந்தேதி காலமானார். அவருக்குப்பிறகு முதல்வராக பன்னீர்செல்வம் பதவியேற்று கொண்டார். தற்போது காலியாக உள்ள அதிமுக போதுசெயலாலாரை தேர்ந்தெடுப்பதற்காக இன்று வானகரத்தில அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூடி, அதில் தற்போது பதினான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் வி.கெ.சசிகலாவை அ.தி.மு.க.வின்  பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.   

அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டுமானால் கட்சியின் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி அதற்கு பொதுக்குழுவில் ஒப்புதல் பெற வேண்டும். இதையொட்டி அ.தி.மு.க. செயற்குழு, மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று 29-12-2016 (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு சென்னை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் துவங்கியது. நிகழ்ச்சியில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் தலைமையில் நடந்தது. ஜெயலலிதா அமரும் இடத்தில அவருடைய புகைப்படம் வைக்கப்பட்திருந்தது. பொதுக்குழுவின் மேடையில் முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தம்பிதுரை, செங்கோட்டையன், பன்ட்ருடி ராமச்சந்திரன், உள்ளிட்டோ அமர்ந்திருந்தனர். பொதுக்குழு கூட்டத்தில் பதினான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது

முதல் தீர்மானமாக மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இரங்கல் தீர்மானத்தை கண்ணீர் மல்க முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வாசிக்க அதிமுகவினர் சிலரும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். 

அதற்கு பிறகு பின்வரும் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது

ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்படிருந்தபோது நேரில்  வந்து நலம் விசரிதவர்களுக்கும் அவருக்காக பிரார்தைனை செய்தவர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

ஜெயலலிதாவின் தொண்டுகளுக்கு புகழஞ்சளியும் செலுத்தப்பட்டது.

அதிமுகவின் பொதுசெயலாலரை நியமிக்க பொதுக்குழு ஒப்புதல் அளிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்துகொடுத்த மதிய அரசுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம்

ஜெயலலிதாவின் நினைவுநாளில் கட்சியை வளர்க்க உறுதிமொழி ஏற்றல்.

அரவக்குறிச்சி, தஞ்சாவூர் திருமங்கலம் உள்ளிட்ட இடைதேர்தலில் வெற்றி பெறச் செய்த வாக்காளர் பெருமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம்

ஜெயலலிதா அவர்களுக்கு பாராளுமன்றத்தில் வெண்கல சிலை அமைக்கவேண்டும். ஜெயலலிதாவின் பிறந்தநாளை தேசிய விவசாயிகள் தினமாக அறிவிக்கக்வேண்டும்.

ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா வழங்கப்படவேண்டும் என்று கோரிக்கை.

ஜெயலலிதாவிற்கு பிலிப்பைன்ஸ் நாட்டின் மகசேசே, உலக அமைதிக்கான நோபல்பரிசு உள்ளிட்ட விருதுகள் வழங்க ஏற்பாடு செய்யவேண்டும்.

எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் வரும் ஆண்டை மக்கள் பனி ஆண்டாக அறிவித்தல். ஜெயலலிதா அவர்களின் ஆன்மா சந்தியடையும் வகையில் தொன்டர்கள் மக்கள் பணியாற்றிடவேண்டும்.

ஜெயலலிதா எப்படி தன் எதிரிகளை எதிர்கொண்டாரோ அவர் வழியில் முன்னேற்றப் பாதையில் அதிமுக வழிநடத்தப்படும்.

இறுதியாக சசிகலாவிடம்  தலைமை பொறுப்பை ஒப்படைக்கும்  தீர்மானம். சசிகலா தலைமையின் கீழ் விசுவாசத்துடன் பணியாற்ற உறுதிமொழி போன்ற தீர்மானகள் நிறைவேற்றப்பட்டது.