கொத்து கத்திரிக்காய் குழம்பு

சமைக்க தேவையான பொருட்கள்:

பிஞ்சு கத்திரிக்காய் 10
தக்காளி 2
சாம்பார் வெங்காயம் 100 gram
பூண்டு 10 பல்
நல்லெண்ணைய் 50 ML
புளி ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு
மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்
தனியாதூள் 1 டீஸ்பூன்
மிளகாய்தூள் 2 டீஸ்பூன் உப்பு தேவைகேற்ப

தாளிக்க தேவையான பொருட்கள் :
கடுகு 1/2 டீ ஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீ ஸ்பூன்
சோம்பு 1 டீ ஸ்பூன்
சீரகம் 1 டீ ஸ்பூன்
வெந்தயம் ¼  டீ ஸ்பூன்
மிளகாய் வற்றல் 2
கறிவேப்பிலை ஒரு கொத்து
கொத்தமல்லி ஒரு கொத்து

அரைக்க:

தேங்காய் துருவல் அரை கப்
முந்திரி 8 பருப்பு

தயார் செய்முறை:

சின்ன கத்திரிக்காயை காம்பு நீக்கிவிட்டு நீளவாக்கில்  நறுக்கிக் வைத்துக்கொள்ளவும்.
சாம்பார் வெங்காயம் மற்றும் பூண்டை உரித்து வைத்துக்கொள்ளவும்.
புளியை இரண்டுகப் தண்ணீரில் நன்றாக கரைத்துக்கொள்ளவும்.
தேங்காய் துருவல் மற்றும் முந்திரிபருப்பை நைசாக அரைத்துக்கொள்ளவும்.

தளிக்கும் முறை
ஒரு கடாயில் நல்லெண்ணையை ஊற்றி எண்ணை காய்ந்தபிறகு கடுகு  சோம்பு, சீரகம், மிளகாய் வற்றல் 2,மற்றும் வெந்தயத்தோடு கறிவேப்பிலை ஒரு கொத்து சேர்த்து தாளிக்கவும்,
தாளித்தப்பிறகு வெங்காயம் தக்காளியை சேர்த்து  நன்றாக வதக்கிக்கொள்ளவும்.
பின்னர் கத்திரிக்காய் போட்டு அதையும் நன்றாக வதக்கவும்.
அதனுடன் ஒரு கப் தண்ணீர், உப்பு சேர்த்து நன்றாக கொதிக்கவைக்கவும்.
பின்னர் மஞ்சள்தூள்,தனியா தூள்,மிளகாய் தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.
காய் நன்றாக வெந்து எண்ணைய் பிரிந்து, புளிகரைசலை சேர்க்கவும், பின்னர் அரைத்த வைத்த தேங்காய் துருவல் விழுதை சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும், கொத்தமல்லி இலையை மேலே தூவிவிடவும்.