கொதிப்பின் உச்சத்தில் மம்தா.

ஆயிரக்கணக்கான மூதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.10,000 கோடிக்கு அதிகமாக மோசடி செய்ததாக ரோஸ் வேலி நிறுவனத்தின் மீது எழுந்த புகாரின் அடிப்படையில் சிபிஐ இந்நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. அதேபோல் அமலாக்கத் துறையும் இந்நிறுவனம் மீது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது, மேலும்  இந்நிறுவனம் சார்ந்த குழுமத்துக்கு சொந்தமாக நாடு முழுவதிலும் உள்ள வங்கிக் கணக்குகளுக்கு அமலாக்கத்துறை சீல் வைத்து முடகியுள்ளது. இந்த  மோசடி புகாரில் திரிணாமூல் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறி  அக்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுதீப் பந்த்யோபத்யாயை சிபிஐபோலீசார் கைது செய்துள்ளனர்.

இதனால் கோபமுற்ற திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள்  இன்று கொல்கத்தாவில் உள்ள பாரதீய ஜனதாவின் கட்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்தினர். இதையடுத்து பாஜக அலுவலகத்திற்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையை கடுமையாக எதிர்ப்பதால்தான்  மத்திய அரசு எங்களை கடுமையாக இதுபோன்ற நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக திரிணாமூல் காங்கிரஸ் குற்றம் சாட்டியது.

அக்கட்சியின் தலைவரும் மேற்கு வங்காள மாநில முதலமைச்சருமான மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், இந்த கைதின் மூலம், பண மதிப்பிழப்பு  விவகாரத்தை நாங்கள் எதிர்க்க மாட்டோம் என மத்திய அரசு கருதுகிறது. ஆனால், எங்களது போராட்டத்தை நாங்கள் நிறுத்த மாட்டோம். அவர்கள் எங்களை பற்றி தவறாக நினைத்துள்ளனர். நாடு தழுவிய போராட்டம் நடத்துவோம் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மிரட்டல் விடுத்துள்ளார்.

மேலும், பிரதமரால் ஒன்றும் செய்ய முடியாது. பண மதிப்பிழப்பு விவகாரதிற்கு எதிராக மக்கள் சாலையில் இறங்கி போராட வேண்டும். மோடி மற்றும் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவை  கைது செய்யப்பட வேண்டும் என்றும் கடுமையாக சாடி இருந்தார்.

இவர் நியாமானவராக இருந்திருந்தால் அந்த MP-க்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டாமா, ஊழல் செய்தவர்களை கைது செய்யும் போது ஏன் கொதித்து எழுகிறார் என்பது புரியவில்லை. என்பதே சராசரி இந்தியனின் கேள்வியாக உள்ளது.