கேப்டன் பதவியில் இருந்து விலகினார் தோணி.

தோனி இந்திய டெண்டுல்கருக்கு பிறகு சர்வதேச அளவில் ரசிகர்களையும் நற்பெயரும் பெற்ற ஒரு சாதனை நாயகனின் பெயர்.

இந்திய கிரிக்கெட் வரலாற்றை தோனியை தவிர்த்து  எழுதிவிடமுடியாது. வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 2004 டிசம்பர் 23ம் தேதி முதல்முறையாக இந்தியாவுக்காக களமிரங்கினார் தோனி.

அன்றுமுதல் டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்றிலும் சேர்த்து 331 போட்டிகளில் கேப்டனாகப் பணியாற்றியுள்ளார்.  டி20 உலக கோப்பை, உலக கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை ஆகிய மூன்றையும் இந்தியாவுக்கு வென்றுகொடுத்த ஒரே கேப்டன் தோனி.

பல்வேறு சாதனைகளை சத்தமில்லாமல் நிகழ்த்திய தோனி கடந்த 2016 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின்போது டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வுபெற்றார்.

தொடர்ந்து ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு கேப்டனாக வழிநடத்தினார். இந்நிலையில்  நேற்று அணியின் ஒருநாள் மற்றும் டுவென்டி - 20 போட்டிகளின் கேப்டன் பதவியில் இருந்து மகேந்திர சிங்

விலகுவதாக அறிவித்துள்ளது கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. புதிய கேப்டனாக விராட் கோலி நியமிக்கப்படுவார் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு கடைசியில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா அபார வெற்றி பெரும்போதே இது தோனிக்கு நெருக்கடியை கொடுக்கும் என்று கிரிக்கட் ஆர்வலர்கள் தெரிவித்திருந்தனர். கேப்டன் பதவியிலிருந்து விலகினாலும் இந்திய அணியில் தொடர்ந்து டோணி விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தோனியின் தொடக்க காலத்தில் அவருடைய சிகை அலங்காரத்தை அனைவரும் விரும்பியிருந்தனர். பாகிஸ்தான் அதிபர் நவாஸ் ஷெரிப் கூட அதைப்பற்றி பேசியிருந்தார் என்பது குரிபிடத்தக்கது.