குழு விவாதத்தில் உங்கள் கருத்து எடுபட சில டிப்ஸ்

பி. ஸ்கூல்கள் எம்.பி.ஏ., போன்ற மேனேஜ்மென்ட் படிப்புகளுக்காக பல கட்டத் தேர்வு முறைகளை நடத்துகின்றன. எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் கூட குழு விவாதத்தை மிகக் கடுமையான ஒன்றாகவே நினைக்கிறார்கள். ஆனால் அது அவ்வாளவு கடினமானதல்ல. நீங்கள் ஒரு நிவாகத்தின் தலைவராக வேண்டும் என்றால் கண்டிப்பாக ஒரு குழுவோடு இணைந்து செயல்படவேண்டும் எனவே, உங்கள் திறனை மதிப்பிட இதைபோன்ற படிப்புகளுக்கு குழு விவாதத்திறன் மிக அவசியமாகும்.

இது போன்ற விவாதங்களில் 8 முதல் 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு 10 நிமிடங்களிலிருந்து  15 நிமிடங்கள் வரை நடக்கும் ஆரம்பத்தில் தலைப்பு கொடுத்ததும்  2 முதல் 3 நிமிடங்கள் வரை யோசிக்க அவகாசம் கொடுப்பார்கள். குழுவில் உள்ள ஒவொருவருடைய திறனும் அங்கு நியமிக்கபட்டிருக்கும் ஆசிரியர்களால் கண்காணித்து துல்லியமாக மதிப்பிடப்படும்.

குழு விவாதத்தில் நீங்கள் பங்கெடுத்து பேசுகையில், உங்களிடமிருந்து,  இரண்டு அம்சங்களை முக்கியமாக, தேர்வு கமிட்டியினர் கவனிப்பார்கள். அவை,

நீங்கள் என்ன பேசுகிறீர்கள்?
நீங்கள் எப்படி பேசுகிறீர்கள்?

குழு விவாதங்களில் உங்களை எப்படி மேம்படுத்துவது என இக்கட்டுரையில் காண்போம்.

1. பொது அறிவு (Knowledge):

இங்கே உங்களுடய பொது அறிவு மிக முக்கியமாகும். நீங்கள் பேசும்போது உங்கள் வாதங்களை நடைமுறையில் அல்லது அண்மையில் நடந்த நிகழ்வுகளோடு ஒப்பிட்டு உறுதியோடு பேசவேண்டும்.

எனவே அன்றாட நிகழ்வுகளோடு வரலாறு, விளையாட்டு, மற்றும் மற்ற கலைகளை பற்றிய அறிவையும் வளர்த்துகொள்வது நல்லது.

 இதற்கு தொலைகாட்சி,  செய்தித்தாள், சமூக ஊடகங்கள் பெரும் உதவியாக இருக்கும்.

2. தொடர்பு திறன் (Communication) :

எதையும் சுருக்கமாகவும், தெளிவாகவும் அதே நேரம் தீர்க்கமாகவும் சொல்லக் கற்றுக் கொள்ள வேண்டும்.

பின்வரும் அம்சங்கள் உங்கள் தொடர்புதிரன் மேம்பட உதவும்.

உங்கள்  ஆங்கிலம் வலுவான நிலையில் இல்லை என்றால் கவலைப்பட வேண்டாம், எப்போதும் எளிய ஆங்கிலத்தை பயன்படுத்துங்கள்.  நீங்கள் எடுத்துக்கூறும் கருத்து தரமானதாக வலுவானதாக இருந்தால் கேட்பவர்கள் உங்கள் ஆங்கிலத்தைப் பற்றி கவலைப்படமாட்டார்கள்

நினைவில் கொள்ளுங்கள், உங்கள் பேச்சில் உண்மையும் நம்பிக்கைத்தன்மையும் தீர்க்கமான கருத்தும் இருந்தால் மட்டுமே மற்றவர்கள் உங்களுடைய பேச்சை கவனிப்பார்கள்.

 நீங்கள் சக மனிதர்களோடு அமர்ந்து இருப்பீர்கள் எனவே சகஜமாக இருங்கள் அங்கே போலித்தன்மை வேண்டாம். பேசும்போது எதார்த்தமாக பேசுங்கள் மனப்பாடம் செய்து ஒப்பிப்பது போல் இருக்ககூடாது.

பேனாவும் பேப்பரும் அனுமதிக்கப்பட்டால் மற்றவர்கள் பேசும்போது குறிப்பெடுத்து அதில் உங்கள் கருத்துக்களை சேர்த்து பேசுங்கள்.

உங்கள் கருத்துக்கு எதிர் கருத்து வருமானால் அதை உதாரணத்தோடு உடைதெரியுங்கள்.

உங்கள் பார்வை குறிப்பிட்ட எந்த நபரையோ நோக்கி இருக்ககூடாது. குழு முழுவதையும் பார்பதாக இருக்க வேண்டும். குறிப்பாக உங்கள் தேர்வாளரை நோக்கி இருக்ககூடாது.

கையசைவுகள் மென்மையாக இருக்கட்டும். காட்டுத்தனமாக இருக்ககூடாது.

3. கவனித்தல் (Listening Skills):

ஒருவரின் தனித்தன்மையில் அவர்களின் ஏனைய தகுதிகளோடு மற்றவர்கள் பேசும்போது அதனை கூர்ந்து கவனிக்கும் திறனும் முக்கிய தகுதியாகும்.

மற்றவர்கள் பேசும்போது கூர்ந்து கவனியுங்கள், அந்த உரையாடலில் முக்கியமான கருத்துக்கள் வெளிப்படலாம் உங்கள் பேச்சை அவர்களின் கருத்துகளில் இருந்தும் தொடங்க வாய்ப்பாக இருக்கும்.

அல்லது உங்களுக்கு ஏற்புடையதில்லை எனில் அதற்காண மாற்று கருத்தை பதிவு செய்ய வாய்ப்பாக அமையும்.

உங்களுக்கு என்ன பேசவேண்டும் என்று புலப்படாமல் இருந்தால் மற்றவர்களின் பேச்சிலிருந்து என்ன பேசலாம் என புரிந்துகொண்டு விவாதத்தில் உங்கள் கருத்துகளை பதிவுசெய்யலாம்.

4. நடத்தை & பண்பாடு Manners & Etiquettes:

குழுவிவாதங்களில் இயல்பாக இருங்கள்.

விவாதத்தில் உணர்ச்சிவசப்படும் நிலை ஏற்பட்டால் கட்டுப்பாடு அவசியம். இல்லாவிட்டால் உங்களை எளிதில் உணர்ச்சிவசப்படகூடியவராக மதிப்பிடலாம்.

மற்றவர்கள் பேசும்போது குறிக்கிட்டு பேசாதீர்கள், அவர் முடித்தவுடன் உங்கள் கருத்தை பதிவுசெய்யலாம்.

அர்த்தமற்ற (பொருளற்ற) கருத்துகளை பயன்படுத்தாதீர்கள் அது உங்கள் மதிப்பை குறைக்கவே செய்யும்.

உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் மணித்துளிக்குள் பேசி முடியுங்கள்.

5. கூட்டு முயற்சி & தலைமைப் பண்பு Teamwork & Leadership

உங்களுடைய அறிமுகம் ஒட்டுமொத்த குழுவிற்கும் இருக்கவேண்டும். யாருடைய கருத்திர்கேனும் பதில்தரவோ அல்லது மாற்றுகருத்துக் கூறவோ அவருடைய பெயரையோ அல்லது என்னையோ குறிபிடாதீர்கள். மாறாக அவர் என்று குறிபிடுங்கள்.

நீங்கள் எவ்வளவு சத்தமாக பேசுகிறீர்கள், அதை மற்றவர்களால் பிரச்சினையின்றி கேட்க முடிகிறதா? என்பதும் கணக்கில் கொள்ளப்படும். நீங்கள் பேசும்போது ஆரம்பத்திலும் , இடையிலும், கடைசியிலும் உங்கள் பேச்சு அனைவரும் கேட்கக்கூடிய அளவு சத்தத்துடன் இருக்கவேண்டும். நீங்கள் தீர்க்கமாக நம்பும் கருத்துகளையும் நல்ல சத்தத்துடன் எடுத்துக்கூறலாம்.

மற்றவர்கள் பேசும்போது அவர்கள் இடையே தடுமாறினால் அவர்களை ஊக்கப்படுத்துங்கள். உங்கள் குழுவில், சில பேர் பேசாமலேயே அமர்ந்திருப்பவர்களையும்  பேச வைக்கலாம், ஆனால் அதனை நீங்கள் லாவகமாக கையாள வேண்டும். அதாவது, நம் குழுவில் சிலர் பேசமாலேயே இருக்கிறார்கள். அவர்கள் நல்ல மதிப்பு வாய்ந்த கருத்தை தங்களிடம் வைத்திருப்பார்கள். அதைக் கேட்க நாம் அனைவரும் ஆர்வமாக உள்ளோம். எனவே, அவர்கள் தங்களின் கருத்தை இங்கே பகிர்ந்துகொண்டால்,  நாம் மிகவும் மகிழ்ச்சியடைவோம் என்று நயமாக கூற வேண்டும்.

குழு விவாதமானது தலைப்பை தாண்டி சென்றால் நீங்கள் அதை எடுத்துகூறி தலைப்புக்குள் வரச்செய்யலாம்.

6. பயிற்சி Practice:

பிரச்சினைகளைத் தாண்டி நீங்கள் சிறப்பாக செயல்பட்டு, குழு விவாத கட்டத்தை வெற்றிகரமாக கடக்க வேண்டுமெனில், சில காலம் கட்டாயம் நல்ல பயிற்சி எடுத்துக்கொள்வது முக்கியம்.

குழுவிவாதம் என்பது ஒரு புதிய விஷயமல்ல நாம் தினம் தினம் நண்பர்களோடு விவாதிக்ககூடியதும் ஒருவகையில் குழுவிவாதம்தான்.

களமும் கலந்துகொல்பவர்களும்தான் புதிதாக இருக்கும். நண்பர்களோடு பேசும்போது எதோ ஒன்றுக்கும் ஆகாத விஷயங்களை விவாதிப்பதை விடுத்து, பயன்தரக்கூடிய விவாதங்களில் ஈடுபடலாம்.

உங்கள் குடும்பத்தாரை ஒருங்கிணைத்து குழுவிவாதங்களில் பயிற்சி மேற்கொள்ளலாம், அன்றைய நாளில் செய்தித்தாளில் வந்த ஒரு சம்பவத்தைக் கொண்டு விவாதத்தை நடத்தலாம், இது உங்கள் விவாத திறனை மேம்படுத்த பேருதவியாக இருக்கும்.

தனியாக இருக்கும்போதும், கண்ணாடி முன்பாக பயிற்சியில் ஈடுபடலாம். உங்களுடைய நிறை குறைகளை கண்டறிந்து நிறைகளை வளர்க்கவும்  குறைகளை களையவும் முயற்சி செய்யுங்கள்.