குழந்தைகளை குளிக்கவைக்கும் கலை

பிறந்த பச்சிளங் குழந்தைகளை குளிக்க வைக்கும் போது ரொம்ப மிகுந்த கவனம் தேவை.  

குழ‌ந்தையை ‌நீ‌ங்க‌ள் கு‌ளி‌க்க வை‌க்கு‌ம் போது தொ‌ப்பு‌ள் கொடிமீது ‌சில சொ‌ட்டு தே‌ங்காய‌் எ‌ண்ணெ‌ய் வை‌த்த ‌பிறகு கு‌ளி‌ப்பா‌ட்டினா‌ல் ஈர‌த்‌தினா‌ல் ‌சீ‌ழ் ‌பிடி‌ப்பது த‌வி‌ர்‌க்க‌ப்படு‌ம்.

தண்ணீர் பட்டதும் குழந்தைகள் துள்ளி கொண்டு தண்ணீரில் வழுக்கி விழுந்து விடுவார்கள். குளிக்க வைக்க்கும் முன் ஒரு மெல்லிய காட்டன் துப்பட்டாவை ரெடியாக உங்கள் தோள் பட்டையில் போட்டு வைத்து கொள்ளுங்கள். ரொம்ப நேரம் குழந்தையை ஊறவிடாமல் கை கால்  இடுப்பு மற்றும் முதுகிலும் தேய்த்து குளிக்கவைக்கவும், முகத்தை கழுவ சிலர் அள்ளித் தெளிப்பார்கள் அவ்வாறு முகத்தில் அள்ளி தெளிக்காதீர்கள்  கை விரகளால் தொட்டு துடையுங்கள். பின் காட்டன் துப்பட்டாவை வைத்து குழந்தையை சுற்றி எடுத்துகொள்ளுங்கள். குளித்தவுடன் குழந்தைக்கு தூக்கம் கண்ணை சொக்கும் எனவே தூங்க வைக்கும் முன் குழந்தைக்கு பாலை கொடுத்து தூங்க வைக்கவும்.

கவணம்: குழந்தைக்கு த‌லைக்கு ஊற்றும் போது மிக‌வும் ஜாக்கிர‌தையாக‌ குளிக்கவைக்கவும். காது , மூக்கு தொண்டையில் த‌ண்ணீர் போகாத‌ வ‌ண்ண‌ம் நீரை ஊற்ற‌னும். கால்களை நீட்டி அமர்ந்துகொண்டு தலை மேலே இருக்குமாறு தலைகுப்புற படுக்கவைத்து குழ‌ந்தை‌யி‌ன் தலையை கா‌ல்க‌ளி‌ன் இடு‌க்‌கி‌ல் வை‌த்து முக‌த்தை ‌கீ‌ழ் நோ‌க்‌கி‌ப் ‌பிடி‌த்தபடி தலை முடியை அலசலா‌ம். இதனால் குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்படாது. முதல் பழகும் வரை பெரியவர்களை கொண்டு தலைக்கு குளிக்கவைப்பதே நல்லது.)

குளிக்கவைத்தவுடன் குழந்தையின் வாய், காது, மூக்கில் தங்களுடைய வாயை வைத்து ஊதுவார்கள். இதுதவறான பழக்கம். பெரியவர்களுக்கு உள்ள தொற்றுக்கிருமிகள் குழந்தையினுள் எளிதாக புகுந்து ஆபத்தை ஏற்படுத்திவிடும். எனவே இதுபோன்ற ஊதும் பழக்கத்தை தவிர்க்கவேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

காதில் ஈரமிருந்தால் அதை துடைக்க ப‌ட்ஸை போட‌ கூடாது. ஒரு சிறிய‌ மெல்லிய‌ துணியை சுருட்டி காதில் துடையுங்கள். மூ‌க்‌கி‌லிரு‌ந்து உல‌ர்‌ந்த ச‌ளி வெ‌ளியே‌ற்ற‌ப்படாம‌ல் இரு‌ந்தா‌ல், சு‌த்தமான து‌ணியை சூடா‌க்‌கி ஆ‌றிய த‌ண்‌ணீ‌ரி‌ல் நனை‌த்து மூ‌க்கை‌த் துடை‌த்து எடு‌க்கலா‌ம்.

குழ‌ந்தை குளித்து முடித்த‌தும் உட‌னே சாம்ராணி புகை மூட்டி அதில் உட‌ம்பு, த‌லை,கால் போன்ற‌வ‌ற்றை காண்பிக்க‌வும். சாம்ப்ராணி புகை காண்பிக்கும்போது மிக‌வும் க‌வ‌ன‌மாக‌ பிடித்து கொள்ளுங்க‌ள். இல்லை என்றால் துள்ளி விடுவார்கள்.