ஐ.டி., துறையில் படிக்கலாமா வேண்டாமா?

பத்து ஆண்டுகளுக்கு முன்பு +2 படித்துகொண்டிருக்கும் பத்துபேரிடம் அடுத்து என்ன படிக்க போகிறீர்கள் என்று கேட்டால் IT என்று குறைந்தது 7 பேராவது சொல்லுவார்கள், அன்று நம்மிடையே ஐடி துறை சார்ந்து பணிபுரிவதே சிறந்த பணி என்ற எண்ணம் நிலவியது. கை நிறைய சம்பளம், வெளிநாடு செல்லும் வாய்ப்புகள், உயர்ந்த வாழ்க்கைத்தரம் போன்ற பல விஷயங்கள் கிடைக்கும் என்பதால் இத்துறைக்கு கூடுதல் கவர்ச்சி ஏற்பட்டது.

ஆனால் நாளடைவில் ஏற்கனவே IT துறையை தேர்ந்தெடுத்து வேலையில்லாமல் அலையும் மாணவர்களை கண்ட பெற்றோர்கள் IT துறைக்கு முழுக்கு போட்டு வேறு துறையை தேர்ந்தெடுத்தனர். இதனால் புதிதாக IT துறையை தொடங்கிய பல கல்லூரிகள் மாணவர்கள் சேர்க்கை குறைந்ததால் அத்துறையை மூடும் நிலைக்கு தள்ளப்பட்டன. தற்போது Mechanical, EEE, Civil பாடப் பிரிவே அனைவராலும் விரும்பப்படுவதாக கூறப்படுகிறது.

உண்மையில் எந்த பாடத்தையும் ஆர்வத்தோடு படித்து 70சதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றால் அவர்கள் தாங்களாகவே தங்கள் வாழ்வை சிறப்பாக அமைத்துக் கொள்வார்கள். எனவே பெற்றோர்கள் ஊடகங்களால் உருவாக்கப்படும் பொதுக்கருத்தை விடுத்து தங்கள் பிள்ளைகளின் ஆர்வத்தை (அ) மனப்பாடம் செய்யும் திறனை அவர்களின் பள்ளி மதிப்பெண் பட்டியலை கொண்டு அறிந்து அதற்கேற்ப முடிவுகளை மேற்கொண்டிட வேண்டும். கணிதத்தில் ஆர்வம் இருப்பின் அவர் பொறியியலில் எந்த பாடப்பிரிவிலும் சிறந்த மதிப்பெண் பெற்றிட முடியும்.

கணிப்பொறி அறிவியலில் ஆர்வம் உள்ளவர்கள் CSC, IT துறையை தேர்வு செய்யலாமா வேண்டாமா என யோசித்துக் கொண்டிருக்கும் பெற்றோர்களுக்கு இந்த பதிவை தருகிறேன்.

இன்றும் இத்துறையின் மீது ஒரு கவர்ச்சியும் அதே சமயம் பயமும் இருப்பது உண்மையே. பலரும் இத்துறை சரிவை சந்திக்கும் என்றே கருதுகின்றனர். அதற்கு நமக்கு வேலைவய்ப்பளிக்கும் நாடுகளில் ஏற்படும் அரசியல் மாற்றங்கள், சீன போன்ற நாடுகளால் உண்டாகும் போட்டிகள் என பல்வேறு காரணங்கள் உள்ளன.

இருந்தாலும் இத்துறை அழிந்துவிடுமா என்றால் இல்லை என்பதுதான் உண்மை. துறை வல்லுனர்கள் அதிகமாவதால் ஏற்படும் போட்டியால் வருமானம் குறைய வாய்புள்ளது ஆனால் ஒட்டுமொத்தமாக இத்துறை அழிந்துவிடும் என்பது சரியாகாது. இன்று அணைத்து பரிமாற்றங்களும் கணினி மூலம்தான் நடக்கிறது. அல்லது கானினி மயமாக்கும் வேலைகள் நடந்துகொண்டிருகின்றன. தற்போது மோடி அறிவித்துள்ள மின்னணு பரிவர்த்தனைக்கு இத்துறை வல்லுனர்களின் தேவை அதிகம். நம் இளம்பொறியாளர்களின் சுறுசுறுப்பும், எதையும் விரைவாக செய்துமுடிக்கும் திறமையும் மேலைநாட்டு நிறுவனங்களை ஈர்துள்ளதால்தான் இங்கே Microsoft Google, Accenture போன்ற நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  

நம் உள்நாட்டு வர்த்தகத்தை உலக வர்த்தகத்தோடு இணக்க இத்துறை பயன்பட்டுள்ளது, இதை மேலும் மேம்படுத்தவும், மருத்துவம், கல்வி, விவசாயம், போக்குவரத்து என பல்வேறு துறைகளை முழுவதும் கணினிமயமாகும் முயற்சிகள் நடந்துகொண்டிருகின்றன இதற்கெல்லாம் IT துறையில் படித்தவர்கள் தேவைபடுவார்கள்.

மேலும் இங்குள்ள  பன்னாட்டு IT நிறுவனகள் நாளையே இழுத்து மூடிவிட்டு சீனாவிற்கோ அல்லது வேறு நாட்டிற்கோ ஓடிவிடமுடியாது. இங்கே கிடைக்கும் வரிச்சலுகைகள், துறைவல்லுனர்கள், நிலையான அரசாங்கம் போன்றவை வேறு நாடுகளில் கிடைப்பதில்லை. எனவே அவர்கள் அவ்வளவு சீக்கிரம் இங்கிருந்து கிளம்போவார்களா என்ன?

எனினும் IT படிப்பை  தேர்ந்தெடுக்கும் முன் நாம் சில விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். கல்லூரிகளில் தாங்கள் தேர்ந்தெடுக்கும் பாடப்பிரிவு எந்த ஆண்டு துவங்கப்பட்டது, அதனுடைய ஆய்வக வசதிகள், பேராசிரியர்களின் எண்ணிக்கை விபரம் மற்றும் அதன் தரச்சான்று ஆகியவற்றை பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.