ஐஐடி நுழைவுத்தேர்வை எதிகொள்ள சில வழிகள்

கிராமப்புறத்தில் படித்துவிட்டு வரும்  சாதாரண மாணவர்களுக்கு இன்று வரை நினைத்துப் பார்க்க முடியாததாக இருக்கும் ஐ.ஐ.டி, இபோழுது மேலும் மேலும் கடினமாகிகொன்டே போகிறது IIT-JEE (Indian Institute of Technology - Joint Entrance Examination) தேர்வை எதிர்கொள்ளும் ஆற்றலை நம் அரசாங்க பள்ளிகள் கொடுக்கத் தவறிவிட்டது எம்பது நிதர்சனமான உண்மை. தனியார் பள்ளிகளில் சமச்சீர் பாடத்திட்டங்களை படிக்கும் மாணவர்களில்கூட விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் இந்த தேர்வை எதிர்கொள்கின்றனர்.

இதற்கு நமது சமச்சீர் பாடத்திட்டங்களை மறுஆய்வு செய்து மாற்றியமைக்க வேண்டும் எம்பதே பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்களின் எதிர்பார்பாக உள்ளது. IIT-JEE தேர்வுக்கு எப்படி தயாராவது என்று இங்கு காண்போம்.

பயிற்சியில் முழுகவனம்:-  

IIT-JEE தேர்வு எழுதவேண்டும் என்று முடிவுசெய்துவிட்டால் உங்களுடைய முழுகவனத்தையும் பயிற்சியில் செலுத்தவேண்டும், உங்களால் முடியும் என்ற நம்பிக்கை வலுவாக இருக்கவேண்டும். உங்கள் முழுத்திறனையும் பயன்படுத்தி படியுங்கள்.

எதை படிக்கவேண்டும்?:

எதை படிக்கவேண்டும்  அறிந்து படிக்கவேண்டும், இதற்கு  கடந்த கால IIT-JEE தேர்வின் மாதிரி கேள்வித்தாளை பாருங்கள், எப்படி, எந்தமாதிரி கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன என்பதனை பார்த்து அதற்குண்டான புத்தகங்களை வாங்கிப்படியுங்கள். கடந்தாண்டு தேர்வு எழுதியவர்களையோ அல்லது பயிற்சி வகுப்புகளுக்கு சென்றவர்களிடமோ உதவியை நாடுங்கள் கண்டிப்பாக உதவி கிடைக்கும்.

நேரம் பொன்னானது:-

நேரத்தை மதிப்பவர்களை IIT-JEE தேர்விற்கு தகுதியானவர்கள் என்றே கூறலாம். ஆம் நீங்களும் உங்கள் நேரத்தை படிக்கவேண்டிய பாடங்களுக்கு ஏற்ப அட்டவணைபடுத்தி சரியாக பயன்படுத்துங்கள்.

JEE நிபுணர்களின் ஆலோசனை:

அவர்கள் அனுபவமிக்கவர்கள் தேர்வை எவ்வாறு அணுகவேண்டும், எதை செய்யவேண்டும் எதை செய்யக்கூடாது என்பதை உங்களுக்கு விளக்குவார்கள். தேர்வின்போது அது உங்களுக்கு உதவியாக இருக்கும்.

மீண்டும் மீண்டும் திருபிப்பாருங்கள்:-

முக்கியமான பாடங்களை மீண்டும் மீண்டும் புரட்டிப்பாருங்கள். இதனால் நீங்கள் பதிலளிக்கும்போது, வேகமாகவும் நம்பிக்கையுடனும் எதிகொள்ளமுடியும்.

உணவும் தூக்கமும்:-

மற்ற தேர்வுகளுக்கு தயாராவது போல் இதற்கும் போதுமான அளவு தூக்கமும் சரியான உணவுமுரையும் அவசியம். ஹோட்டல் உணவுகள், ஃபாஸ்ட் புட் உணவுகளை அறவே தவிர்த்து விடுங்கள். நொறுக்குத்தீனி எதுவும் சாப்பிடாதீர்கள். எளிதில் செரிமானம் ஆகும் உணவுகளை மிதமான அளவில் நேரத்திற்கு சாப்பிட்டு விடுங்கள். பகல் நேரங்களில் மோர், இளநீர், பழச்சாறுகள் குடிக்கலாம். கோதுமை, கடலை,தானியங்கள், பச்சைபட்டாணி, சோயாபீன்ஸ் போன்றவைகளை அதிகம் சாப்பிட வேண்டும். காய்கறிகள், பழங்களையும் அதிக அளவு சாப்பிட வேண்டும்.

இதைத்தவிர பயிற்சி நிறுவனங்களுக்கு போகவேண்டுமா என்றால் அது அவரவர் கட்டுகோப்பு மற்றும் கல்வியறிவை பொறுத்தது.

தமிழ்நாட்டை தவிர மற்ற மாநிலங்களில் இருந்து தேர்வு எழுதும் மாணவர்களில் பயிற்சி நிறுவனங்களில் பயின்றவர்களை விட சுயமாக படித்தவர்களே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். சில பயிற்சி நிறுவனங்கள் சிறப்பாக பயிற்சிகொடுக்கின்றன, அதை தீர விசாரித்து சேர்ந்து படிக்கலாம்.  தேர்விற்கு தேவையான படங்கள், புத்தகங்கள் என அனைத்தும் அங்கே கிடைக்கும். சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் பயிற்சிகொடுக்கின்றன, அதை தேடி விசாரித்து பயன்பெறலாம்.

சில வலைதளங்களில் IIT-JEE (Indian Institute of Technology - Joint Entrance Examination) தேர்வை எதிர்கொள்ளத் தேவையான பாடங்கள் இலவசமாகவும் கிடைகின்றன.