எம்.எல்.ஏ.வின் பாதுகாவலர் வங்கி கணக்கில் 100 கோடி ரூபாய்

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி எம்.எல்.ஏ. ஒருவரின்  பாதுகாவலர்  வங்கி கணக்கில் 100 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், ஷிஷாமாவோ சட்டசபை தொகுதி சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்தவர் எம்.எல்.ஏ., இர்பான் சோலங்கி.  அவருக்கு பாதுகாவலராக பணிபுரிந்து வருபவர் குலாம் ஜிலானி. குலாம் ஜிலானி, மால் ரோடு எண்டும் இடத்தில உள்ள SBI வங்கிக் கிளையில் கணக்கு வைத்துள்ளார்.

 கடந்த செவ்வாய் கிழமை இரவு ஏ.டி.எம் மையத்துக்குச் சென்று,  தனது கணக்கில் இருந்து பணம் எடுத்துள்ளார். பணம் எடுத்த பிறகு,  அவருடைய கணக்கில் மீதத் தொகையாக, ரூ.99,99,02,724 இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதுகுறித்து, எம்.எல்.ஏ., சோலங்கியிடம் தெரிவித்தார். சோலங்கி மூலமாக கான்பூர் மாவட்ட ஆட்சியருக்கு  தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, தற்போது குலாமின் வங்கி கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டு விசாரணை நடைபெறுகிறது..