உலகின் உயரமான பாலம் சீனாவில் திறப்பு

பெய்ஜிங், டிச.30- சீனாவில் கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான பாலம் போக்குவரத்திற்கு திறக்கப்பட்டுள்ளது. இப்பாலம் இரு மாகாணத்தை இணைக்கும் விதமாகவும் பயண நேரத்தில் நான்கில் மூன்று பங்கினை மிச்சப்படுத்தும் வகையிலும் கட்டப்பட்டுள்ளது.

இப்பாலத்திற்கு பெய்பஞ்சியாங் பாலம் என பெயர் சூட்டப்படுள்ளது. இதன் உயரம் தரையிலிருந்து 565 கிமீ ஆகும். இது யூனான் மற்றும் குவாங்ஷே எனும் இரு மலைகளை இணைத்துக் கட்டப்பட்டுள்ளது. இந்த மலைகளுக்கு இடையில் ஓடும் ஆற்றுக்கு மேல் இந்த பாலம் அமையப்பெற்றுள்ளது.

பாலம் கட்டுவதற்கு முன் இவ்விரு இடங்களுக்கு பயணிப்பதற்கு நான்கு மணிநேரம் பிடிக்கும் என்பதோடு இது பெரிய சுற்றாகவும் அமைந்திருந்தது. ஆனால் நேற்று போக்குவரத்திற்கு திறக்கப்பட்ட இந்த பாலத்தினால் பயண நேரம் ஒரு மணி நேரம் வரை குறைந்துள்ளது. 

ஏறக்குறைய 1.3 கிமீ தூரம் கொண்ட இப்பாலத்தைக் கட்டி முடிக்க, ஒரு பில்லியன் யுவான் அதாவது ரிம 600 மில்லியன் செலவழிக்கப்பட்டுள்ளது.