உத்தரபிரதேச மாநிலத்தில் குழப்பம், அகிலேஷ் யாதவ் கட்சியிலிருந்து நீக்கம்.

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் சமாஜ்வாதி கட்சியில் நிலவிய கருத்துவேற்றுமை உச்சமடைந்துள்ளது. முலாயம்சிங்கும், அவரது மகன் அகிலேஷ் யாதவும் போட்டிபோட்டுகொண்டு வேட்ப்பலர்களை அறிவித்ததால் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி மகன் அகிலேஷ் யாதவை சமாஜ்வாதி கட்சியிலிருந்து முலாயம் சிங் 6 ஆண்டுகளுக்கு சஸ்பெண்ட் செய்தார்.

உத்தரபிரதேசத்தில் முலாயம்சிங்கின் மகன் முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி ஆட்சி நடைபெற்றுகொண்டிருகிறது. சமீபகாலமாக முலாயம் சிங் யாதவிற்கும் மகன் அகிலேஷ் யாதவிற்கும் இடையில் உரசல் இருந்து வருகிறது. உத்தரபிரதேசத்தில் சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு நடைபெற இருப்பதால், அங்கு மொத்தம் 403 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அவற்றில் சமாஜ்வாதி கட்சி சார்பில் 325 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை கட்சி தலைவர் முலாயம் சிங் நேற்று முன்தினம் வெளியிட்டார். அதில் அகிலேஷின் ஆதரவாளர்களுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. அதற்கு அகிலேஷ் யாதவ் தனது அதிருப்தியை தெரிவிக்க, முலாயம்சிங் கண்டுகொள்ளவில்லை. அதனால் தந்தைக்கு போட்டியாக அகிலேஷ் தனது ஆதரவாளர்கள் 35 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். இதி விரிசலை மேலும் பெரிதாக்கியுள்ளது.

இதனால் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி அகிலேஷ் யாதவையும், அகிலேஷ் ஆதரவாளரும் முலாய் சிங்கின் தம்பியுமான ராம் கோபால் யாதவவையும் சமாஜ்வாதி கட்சியிலிருந்து 6 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்வதாக முலாய் சிங் உத்தரவிட்டுள்ளார். கட்சியை காப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முலாயம் சிங் தெரிவித்தார்.

இதுதொடர்பாக, இன்று மாலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முலாயம் சிங், " அகிலேஷ் யாதவை முதல்வர் பதவியில் அமர வைத்தவன் நான். தற்போது, அவன் என்னிடம் ஆலோசனை நடத்துவது கூட இல்லை. கட்சிக்கு விரோதமாக வேட்பாளர்களை வெளியிட்டுள்ளான். ராம் கோபால் யாதவ் அகிலேசின் எதிர்காலத்தை பாழாக்கி வருகிறார். கட்சி தலைவரான என்னிடம் அனுமதி பெறாமல் கட்சியின் செயற்குழுவிற்கு அழைப்பு விடுத்துள்ளார்கள்.

கட்சியை காப்பதற்கு எனக்கு வேறு வழி தெரியவில்லை. ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாலும், கட்சி விரோத போக்கை கடைபிடித்ததாலும் அகிலேசையும் ராம்கோபால் யாதவையும் கட்சியிலிருந்து 6 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்கிறேன்." என்றார்.

உத்தரபிரதேசத்தில்  403 சட்டசபை தொகுதிகள்உள்ளன அங்கு  அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், ஆளும் சமாஜ்வாதி கட்சியில் ஏற்பட்டுள்ள இந்த மிகப்பெரிய பிளவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டதால், அகிலேஷ் யாதவ் தனிக்கட்சி தொடங்குவார் என்று தெரிகிறது. ஆவாறு தனிக்கட்சி துவங்கினால் காங்கிரஸ் ஆதரவளிக்க கூடும். இதற்கிடையே அகிலேஷ் முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்வது குறித்து தனது ஆதரவாளர்களுடன் பேசி வருகிறார்.