உடல் சூட்டை தனிக்க, தேகம் பொலிவுபெற, பால்வினை நோய்கள் தீர சந்தனம்

தாவர விளக்கம்

மூலிகையின் பெயர் : 

சந்தனம்

ஆங்கிலப் பெயர்: 

SANTALUM ALBUM

தாவரக்குடும்பம்: 

SANTALACEAE

அடையாளம்: 

தென் இந்தியாவில் இலையுதிர் காடுகளில் காணப்படும் மருத்துவப் பயன்பாடுடைய  சிறு மரம். இது துவர்ப்பு மணமும் உடையது. தமிழகத்தில் தமிழக கர்னாடக எல்லையில் அதிகம் கணப்படகூடியது. சந்தன மரம் சுமார் 12 முதல் 40 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது மாற்றடுக்கில் அமைந்த இலைகளையுடைய  மரம். சந்தனம்இலைகள் தடித்தவை. 4 முதல் 7 செமீ நீளத்தில் இலைகளின் மேற் பகுதி கரும்பச்சை நிறமாயும் அடிப் பகுதி சற்று வெளிறியும் காணப்படும். கணுப்பகுதியிலும் நுனிப் பகுதியிலும் மலர்கள் தொகுப்பாக  காணப்படும். சந்தனமரத்தின் முற்றிய உலர்ந்த நடுக் கட்டை தான் நறுமணம் உடையது. மருத்துவப் பயனுடையது. இதை காடில்லாத மற்ற இடங்களில் வளர்த்தால் அரசு அனுமதி பெற்றுத்தான் வெட்ட வேண்டும். இதன் விலை மிகவும் அதிகம். 2-3 ஆண்டுகளில் பழம் விட ஆரம்பிக்கும். விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின் தான் முழுப் பலன் கிடைக்கும். மரத்தின் வைரம் பாய்ந்த கட்டைப் பகுதி எண்ணெய்ச் சத்து நிரம்பியது. இதிலிருந்து எடுக்கப்படும் ‘அகர்’ என்னும் எண்ணெய் மருத்துவப் பண்புகள் கொண்டது.. சந்தனமரம் தனித்து வளராது. வேறு மரத்திற்கு அருகில்தான் வளரும். மற்ற மரத்தின் வேரிலிருந்து தனக்கு வேண்டிய ஊட்டச் சத்துகளைப் பெற்றுக் கொள்கிறது.

 

மருத்துவக் குணங்கள்: 

நற்சந் தனமரத்தா னல்லறிவு மின்பமெழிற்
பொற் செந்திருவருளும் பூமிதத்துண் - மெச்சுஞ்
சரும வழகுந் தனிமோ கமுமாம்
மிருமுநோ யேகும் பறழ்ந்து

- பதார்த்த குணபாடம் - பாடல் (209)

பொருள் : நல்ல சந்தன மரக்கட்டையை முறைப்படி பயன்படுத்துவோருக்கு அறிவும், மனமகிழ்ச்சியும், உடல் அழகும் கூடும், பெண்களுக்கு வெள்ளை, வெட்டை நோய்கள் நீங்கும்

சந்தனம் உடலுக்கு குளிர்சியுண்டாகவும், சிறு நீர் பெருக்கவும், நலிந்த  உடல் பலம் பெறவும் பயன்படுகிறது. வியர்வையை அதிகரிக்க சுரபிகளைகூடியது, வெண்குட்டம், சொறி, சிரங்கு, அக்கி, படர்தாமரை, தேமல், வெண்குட்டம், கருமேகம், வீக்கம், முகப்பரு, தழும்பு, முகக் கறுப்பு  போன்ற சரும வியாதிகளை குணப்படுத்தும். இதன் எண்ணெய் தோல்நோய் மருத்துவத்தில் முக்கிய பங்குவகிக்கிறது.

உடல் வெப்பத்தை குறைத்து சிறுநீர் தாரை எரிச்சல் சூட்டைத் தணிக்கும், விந்து நீர்த்துப் போதலைக் கெட்டிப் படுத்தகூடியது. மேலும் தோல் நோய்களை நீக்கவும் நறு மணத்திற்காகவும் இதன் எண்ணெய் பயன் படுகிறது.

இது ஒரு சிறந்த கிருமி நாசினி மேலும் உடல் அழற்சியை குறைக்கும் தன்மை உடையது. சந்தன கட்டையை எலுமிச்சம் பழச்சாற்றில் உரைத்துத் தடவ முகப்பரு, தவளைச் சொறி,  சொறி,  படர் தாமரை, வெண்குட்டம்,  கருமேகம் வெப்பக்கட்டிகள் தீர்ந்து வசீகரமும் அழகும் உண்டாகும். கண்கட்டிகள் கரைய சந்தனக் கட்டையை எலுமிச்சம் பழச் சாற்றில் மைய உரைத்துத்துப் பசைபோல செய்து கட்டிகளின் மீது பற்றுப் போட வேண்டும். இரவில் படுக்க போகும் முன்னர் இவ்வாறு செய்து கொண்டு காலையில் கழுவ வேண்டும். 5 நாட்கள் தொடர்ந்து செய்யலாம்.

பசும் பாலில் உரைத்துப் புளியங் கொட்டையளவு காலை, மாலை சாப்பிட்டு வர உடலுக்கு குலுமையூட்டி வெட்டைச் சூடு, மேக அனல், சிறுநீர்ப் பாதை ரணம், அழற்சி ஆகியவை தீரும்.
 

பெண்கள் சந்தனத்தூளை இளநீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் வடிகட்டி அருந்தி வந்தால் உடல்சூடு தணியும் வெள்ளைப் படுதலைப் குணமாகும்.

இதயம் பலவீனமாக உள்ளவர்கள் 20 கிராம் சந்தனத்தூளை 300 மி.லி. நீருல் போட்டுக் காய்ச்சி 150 மி.லி.யாக வரும் வரை கொதிக்கவைத்து வடிகட்டி 3 வேளையாக 50 மி.லி. குடிக்க இதயப் படபடப்பு குறையும். இதயம் பலமாகும் மார்புத் துடிப்பு மேலும் நீர்க் கோவை, காய்ச்சல், மந்தம் குணமாகும்.

பலவித பால்வினை நோய்களுக்கு இது நல்மருந்தாக விளங்குகிறது. பால்வினை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சந்தனத்துண்டுளை நீரில் ஊற வைத்து மையாய் அரைத்து சுண்டைக்காயளவு பாலில் கலந்து இரவு மட்டும் 20 நாள் உட்கொள்ள நோய் தீரும்.

நெல்லிக்காய்ச்சாறு 15 மில்லியில் சுண்டைக்காய் அளவு சந்தன விழுதைக் கலந்து 40 நாள் குடித்து வர நீரிழிவு நோய் தீரும்.

சந்தன எண்ணெய்-தைலம் -‘எசன்ஸ்’ 2-3 துளி பாலில் கலந்து குடிக்க உடல் குளிர்ச்சி பெறும். நெல்லிக்காய்ச்சாறு 50 மி.லி. யுடன் அரைத்த சந்தனம் 5-10 கிராம் கலந்து 48 நாள் காலை, மாலை குடிக்க நீரிழிவு குணமாகும்.