உடல் எடையை குறைக்க, மாதவிடாய் சரியாக வர பயன்பாடும் பப்பாளி.

தாவர விளக்கம்

மூலிகையின் பெயர் : 

பப்பாளி

ஆங்கிலப் பெயர்: 

CARICA PAPAYA

தாவரக்குடும்பம்: 

CARUCACEAE

அடையாளம்: 

பப்பாளி தமிழகமெங்கும் பரவலாக வளர்க்கப்படுகிறது. எல்லாவகை மண்களிலும் வளரக்கூடியது. நீண்ட குழல் வடிவ காம்புகளில் 2 அடி அகலமான பெரிய  கைவடிவ இலைகளை  உச்சியில் மட்டும் கொண்ட மென்மையான கட்டையுடைய பாலுள்ள மரம். ஒரு சில மரங்களில் கிளைகள் அரிதாகக் காணப் பெறும். பெரிய சதைப்பற்றுடைய கனியை உடையது, பழம் உருண்டையாகவும், நீண்டும் இருக்கும். ஆண் மரம் பெண் மரம் என்று உண்டு. ஆண் மரத்தில் பூக்கள் சரசரமாக தொங்கும் ஆனால் காய்கள் காய்க்காது, பெண்மரதில் பூ பூத்து காய் காயக்கும் அயல் மகரந்தச் சேர்க்கையில் அதிக பழங்கள் விடும். iஇது ஒரு பல்லாண்டுப் பயிர். 

மருத்துவக் குணங்கள்: 

உடல் எடை குறையவேண்டும் என விரும்புகிறீர்களா? சருமம் அழகாக் மின்னவேண்டுமா, கண் பார்வை மங்குகிறதா அப்படியானால் உங்களுக்கு பப்பாளி அவசியம் தேவை.

பப்பாளிக் காயை கீறி விட்டு பால் எடுத்து அதைப் பக்குவப் படுத்தி மருந்துக்குப் பயன் படுத்ததுகிறார்கள்.

இதில் முக்கிய வேதியப் பருள்கள் கார்பன், கார்போசைடு மற்றும் பப்பேன் உள்ளன. பப்பாளியில் வைட்டமின் ஏ, பி, சி, ரிபோ பாப்பைன் என்சைம், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், பொட்டாசியம், வைட்டமின் இ மற்றும் கே ஆகியவை நிறைந்துள்ளன.

பப்பாளி  குடற்புழுவை வெளியேற்றும்,  தாய்பால் சுரப்பை பெருக்கும், மாதவிலக்கைத் தூண்டக்கூடியது,  நாடி நடையை உயர்த்தி உடலுக்கு வெப்பத்தை தரும். இவை  தவிர மலத்தை இளக்கி மலச்சிக்கலைப் போக்குவது. சிறுநீர்ப பெருக்குவதும் இதன் பயனாகும்.

பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.

பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட வயிற்றிலுள்ள நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும். அல்லது வயிற்றிலுள்ள பூசிகளை ஒழிக்க பப்பாளி பாலை விளக்கெண்ணையில் கலந்து கொடுத்தால் வயிற்றுப் பூச்சிகள் நீங்கும்.

பெரியோர் 30 துளி விளக்கெண்ணெய் + 60 துளிப் பால்
இளைஞர் 60 துளி விளக்கெண்ணெய் +  துளிப் பால்.
சிறுய குழந்தை 15 துளி விளக்கெண்ணெய் + துளிப் பால்.

வயிற்றை இழுத்துப் பிடித்து வலிப்பதால் காயின் பாலை சேகரித்துக் காய்ச்சினால் பொடித்து உப்பாகி விடும். இந்த உப்பில் ஒரு கிராம் அளவு நெய் கலந்து சாப்பிட பித்த குன்மம், பிறவயிற்றுவலி, வாய்வு, வயிற்றுப் புண் குணமாகும்.

இதன் பாலை தேங்காய் நெய்யில் கலந்து தடவ வாய்புண், உதட்டுப்புண் குணமாகும். இப்பாலுடன் பொரித்த வெங்காரம் சேர்த்துத் தடவ வேர்க்குரு குணாகும். மண்டைக்கரப்பான் (குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்), சொறிக்கு படிகாரத்துடன் இப்பாலை மத்திதுப் போட குணமடையும். பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.

பப்பாளிக்காயைச் சமைத்து வாரம் மூன்று நாள் உண்டு வரத் தடித்த உடம்பு குறையும். பழம் நாளும் ஒரு துண்டு சாப்பிடலாம். தாய்ப் பால் பெருகும்.

மாத விலக்கில் தடை இருந்தால் பப்பாளிப் பழம் சாப்பிட்டால் நீங்கும், . தடைபட்ட விலக்கு வெளியைறும், எச்சரிக்கை ஓரிரு மாதக்கருவும் கலையும். கர்ப்பிணிப் பெண்கள் முதல் 5 மாதங்களுக்கு பப்பாளி பழம் சாப்பிடுவதை தவிர்க்கவும். 5 மாதங்களுக்கு பின்பு சிறிய துண்டு பாப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வந்தால் மந்தத் தன்மை குணமடையும்.

மாமிசம் சமைப்போர் 2-3 துண்டு பப்பாளிகாயைப் போட்டு வேக வைத்தால் எளிதில் வேகும். பதமாகவும் சுவையாகவும் இருக்கும்.

தினந்தோறும் 1 துண்டு பப்பாளிப் பழம் சாப்பிட்டு வர கல்லீரல், மண்ணீரல், வீக்கம் குறையும். அஜீரணப் பிரச்சனைகள் களைந்து செரிபாற்றல் பெருகும் குன்மம்,  ரணம்,  அழற்சி,  வயிற்றுப் பூச்சி,  மலச்சிக்கல், சிறுநீர்பாதை கோளாறுகள் தீரும்.

பல்லரணையால் வீக்கம் ஏற்பட்டு வலி இருந்தால் பாலைத் தடவ கரைந்து குணமடாயும்.

பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் போட்டு வர கட்டி உடையும். இலைசாறை வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும்.

பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும்.

அடிக்கடி சளி, இரும்பல், காய்ச்சல் வந்து அவதிப்படுபவர்கள் பப்பாளிப் பழம் சாப்பிட்டால், இயற்கையாகவே உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து இதுபோன்ற பாதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம்.

கவனம் - பழம் அதிக அளவில் சாப்பிட்டால் வயிற்றுக்கடுப்பு வரும்.