இரவில் அழும் குழந்தைகளை தூங்க வைப்பது எப்படி?

பிறந்த குழந்தை விளையாடும் போதும், சிரிக்கும் போதும் பார்க்க அழகாக தான் இருக்கும். ஆனால் குழந்தைகள் இரவில் தூங்கவில்லை என்றால் அவ்வளவு தான், அக்குழந்தையின் அம்மாக்கும், அப்பாவுக்கும் தூக்கமே கிடையாது

நாள் முழுவதும் வேலை செய்து களைப்போடு இரவில் தூங்கும் போது குழந்தைகள்  தூங்காமல் சதா அழுதுகொண்டே இருந்தால் கோபம் கோபமாக வறுவது சகஜம். அதற்காக குழந்தையை அடித்தோ மிரட்டியோ தொங்க வைக்க முற்படக்கூடாது. தூக்கமின்மை என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எந்த வயதினரையும் தாக்கும்.

நமக்கு இருக்கும் வேலைகளின் அவசரத்தில். தூங்கு...தூங்கு என அதட்டியோ, வேகவேகமாக தொட்டிலை ஆட்டியோ தூங்க வைத்தால் குழந்தை பயத்தில் தூக்கத்தை மறந்து அழஆரம்பித்து விடும்.

குழந்தைகளுக்கு தூக்கமில்லாமல் போவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம், என் என்பதை அறிந்துகொண்டு அதை களைய வேண்டியது பெற்றோரின் கடமையாகும்.

 • உங்களது குழந்தை இருளுக்குப் பயப்படுகிறதாக இருக்கலாம்.  ஏசாமல் பேசாமல் இதமாக கண்டறிய முயலுங்கள். இரவு லைட் ஒன்றை ஒளிரவிடுவது பிரச்சனையைத் தீர்க்கும்.
 • பயங்கரக் கனவுகள் காரணமாகலாம். நல்லாகத் தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தை திடீரென அலறி விழித்து எழுந்தால் அதுதான் காரணம் எனக் கொள்ளலாம். விழித்த பின் பெரும்பாலான கனவுகள் மறந்து போகின்ற காரணத்தால் குழந்தையால் விளக்க முடியாதிருக்கும். படுக்கப் போகும் முன்னர் பயங்கரமான கதைகள், திடுக்கிட வைக்கும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பதை, படிப்பதை, கேட்பதைத் தவிர்க்க வேண்டும். பிள்ளை படுக்கப் போகும் முன்னர் அரவணைத்து குட் நைட் சொல்லி நல்ல சிந்தனைகளுடன் மகிழ்ச்சியாகப் படுக்க விடுங்கள்.
 • பல பிள்ளைகளுக்கு பாடசாலைப் படிப்பு, ரியூசன், மியூசிக் கிளாஸ், டான்ஸ், விளையாட்டு பேச்சுப் போட்டிகள் என வேலை அதிகம். களைத்துவிடுவார்கள். அதற்கு மேலாக அடுத்த நாள் முகம் கொடுக்க வேண்டிய விடயங்கள் பற்றிய மனப்பதற்றமும் காரணமாகலாம்.
 • வாழ்க்கை முறையில் ஏற்படுகிற தாக்கங்கள் குழந்தைகள் மனத்தில் ஆழமான பதற்றத்தை விதைத்துவிடலாம். நெருங்கிய உறவினரின் இறப்பு, தகப்பன் அல்லது தாயைப் பிரிந்திருக்க நேருதல், வீடு மாறுதல், புதிய பாடசாலைக்கு செல்ல நேருதல், நோய் வாய்ப்படுதல் போன்ற பலவாகலாம். காரணத்தைக் கண்டறிந்து அமைதிப்படுத்துங்கள்.
 • உடல் ரீதியான அசௌகரியங்களும் காரணமாகலாம். கடுமையான வெக்கையும் வியர்வையும், கடும் குளிர், பசியோடு தூங்கச் சென்றமை, படுக்கையை இரண்டு மூன்றுபோர் பகிர்வதால் ஏற்படும் இட நெருக்கடி போல எதுவாகவும் இருக்கலாம்.

தூங்க வைக்க சில எளிய டிப்ஸ்

 • எப்போதுமே குழந்தைகளை பகல் வேளையில் விளையாட வைத்துவிட்டு, மாலையில் அவர்களை தூங்க வைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். இல்லாவிட்டால், இரவில் தூங்காமல் விளையாடிக் கொண்டே இருப்பார்கள்.
 • தினமும் ஒரே மாதிரியான நடவடிக்கையை பின்பற்றினால், குழந்தைகள் அதற்கேற்றாற் போல் விரைவில் மாறிக் கொள்வார்கள்.
 • இரவு நேரத்தில் குழந்தைகளுக்கு வெதுவெதுப்பான நீரில் குளிப்பாட்டி விட்டால், அவர்களுக்கு தானாக தூக்கமானது வந்துவிடும்.
 • தாயுடன் தனிமையாக தாயின் அரவணைப்பில் இருந்தால், எப்பேற்பட்ட குழந்தையும் விரைவில் தூங்கிவிடும்.
 • கதைகள் கேட்கும்போது குழந்தைகளின் கவனம் ஒரே இடத்தில் குவிந்து மனநிலை அமைதியாகிறது. இதனால் தூக்கம் எளிதாக வருகிறது. பெற்றோருடனும் குழந்தைக்கு இருக்கும் உறவும் இதன் மூலம் இன்னும் சிறப்பாக அமையும். நான் தனிநபர் இல்லை என்ற நம்பிக்கையும் குழந்தைக்கு ஏற்படும்.
 • மென்மையான தாலாட்டுப் பாடினால், அவர்கள் அதைக் கேட்டுக் கொண்டே தூங்கிவிடுவார்கள்.
 • தூங்க வைக்கும் போது ஒரே இடத்தில் தூங்க வைப்பது நல்லது. தலையை மென்மையாக கோதிவிடுவது, தட்டிக் கொடுப்பது போன்ற செயல்களால். அம்மாவின் அரவணப்பை உணர்ந்து குழந்தைகள் தூங்கி விடுவார்கள். அதே சமயம் எல்லா சூழ்நிலையிலும் குழந்தை தூங்கப் பழகிக்கொள்ள வேண்டும். அதவாது, தொட்டில், மெத்தை, தரை விரிப்பில், மடியில் இருப்படி எல்லா வித சூழ்நிலையிலும் குழந்தை தூங்க பழகிக்கொண்டால், எங்கும் குழந்தையை எடுத்துச் செல்லவது எளிதாகும்.