இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமனம்.

புதுடெல்லி, ஜூன் 6-

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்  ராகுல் டிராவிட் 19 வயதிற்குர்ப்பட்டோர் மற்றும் A அணிக்குப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருப்பதாக பிசிசிஐ செயலாளர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர்களான சச்சின், கங்குலி, லஷ்மண் ஆகியோர் பி.சி.சி.ஐ. ஆலோசனைக் குழுவில் நியமிக்கப்பட்டனர். இந்த குழுவில் டிராவிட் பெயர் இடம்பெறாததால்அவரது ரசிகர்கள், கிரிக்கட் ஆர்வலர்கள் மற்றும் முன்னாள் வீரர்களும் அதிருப்தி அடைந்தனர்.

இந்நிலையில், இந்த அறிவிப்பை அனுராக் தாகூர் இன்றுதெரிவித்துள்ளார், ஜூலையில் நடைபெறும் இந்தியா,தென்னாப்பிரிக்க மற்றும் ஆஸ்திரேலியா மோதும் முத்தரப்பு கிரிகெட் போட்டிக்கும், அடுத்தாண்டு 19 வயதிற்குர்ப்பட்டோருக்கான உலக கோப்பைக்கும் இவரே பயிற்சியாளராக இருப்பார் என்று கூறுகின்றனர்.

ராகுல் டிராவிட்டுக்கு தலைமை பயிற்சியாளர் பொறுப்பு அளிக்கப்பட்டதாகவும், தனது குடும்பத்துடன் நேரம் செலவிட விரும்புவதால் அதை ஏற்கவில்லை என்றும் தெரிகிறது. 42 வயதாகும் ராகுல் டிராவிட் 164 டெஸ்ட் மற்றும் 344 ஒருநாள் கிரிகெட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.