இந்திய ஒலிம்பிக் சங்க ஆயுட்கால தலைவர் பதவியை ஏற்க சுரேஷ் கல்மாடி மறுப்பு .

மத்திய விளையாட்டு துறை அமைச்சகத்தின் அழுததால்  இந்திய ஒலிம்பிக் சங்க ஆயுட்கால தலைவர் பதவியை ஏற்க சுரேஷ் கல்மாடி மறுப்பு .

கடந்த 2010-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு அரங்கம் அமைப்பதிலும், விளையாட்டுச் சாதனங்கள் வாங்கியதிலும் ரூ90  ஊழல் நடைபெற்றதாக புகார் எழுந்தது.  இதன தொடர்ச்சியாக நடந்த சிபிஐ விசாரணையில் சுரேஷ் கல்மாடி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சுரேஷ் கல்மாடி சுமார் 10 மாத காலம் சிறையில் இருந்து பின்னர் ஜாமினில் வெளியே வந்துள்ளார்.

இந்நிலையில் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் பொது கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சுரேஷ் கல்மாடி மற்றும் அபே சிங் சவுதாலா ஆகியோர் இந்திய ஒலிம்பிக் சங்க கவுரவ ஆயுட்கால தலைவர்களாக நியமிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. இது நாட்டு மக்களிடையேயும் அரசியல் தலைவர்களுக்குகுள்ளும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர் எதிர்ப்புகளுக்குப் பிறகு ஆயுட்கால தலைவர் பொறுப்பை ஏற்க மறுத்துள்ளார். இதுகுறித்து IOA., தலைவர் என்.ராமச்சந்திரனுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:- “  ஆயுட்கால தலைவர் என்ற கவுரவத்தை அளித்த IOA.,-க்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ஆனால், இந்த தருணத்தில் இந்த விருதை நான் ஏற்றுக்கொள்வது பொருத்தமாக இருக்காது என்று கருதுகிறேன்.  என் மீதான குற்றச்சாட்டுக்கள் நீக்கப்படும் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது. எனவே இந்த கவுரவத்தை ஏற்பதை நான் ஒத்திவைத்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக மத்திய விளையாட்டுத் துறை மந்திரி விஜய் கோயல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார் மேலும் IOA.,-வின் இந்த முடிவு சட்டத்திற்கு புறம்பாக இருகிறது, IOA. வெளிப்படையாக செயல்படவேண்டும் மேலும் இருவரையும் நீக்கும்வரை மத்திய அரசு IOA.,வுடன் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளாது என்றும் . முடிவு  குறித்து விளக்கம் அளிக்குமாறும் விளையாட்டுத்துறை அமைச்சகம் IOA.-க்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.