இந்திய ஒலிம்பிக் சங்க ஆயுட்கால தலைவராக கல்மாடி

ஊழல் குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் இந்தியாவின் மிகப்பெரிய பொறுப்பிற்கு கவுரவ தலைவராக நியமிக்கப்படிருக்கு கொடுமை நடந்தேறியுள்ளது. ஆம் விளையாட்டுத்துறையில் நடந்த ஊழலில் சிக்கி சிறை சென்று திரும்பிய முன்னாள் காங்கிரஸ் எம்.பி., சுரேஷ் கல்மாடியைத்தான்   இந்திய ஒலிம்பிக் சங்க ஆயுட்கால தலைவராக நியமித்துள்ளனர் அவரோடு அபே சிங் சவுதாலாவும்  நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2010-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு அரங்கம் அமைப்பதிலும், விளையாட்டுச் சாதனங்கள் வாங்கியதிலும் ரூ90  ஊழல் நடைபெற்றதாக புகார் எழுந்தது.  இதன தொடர்ச்சியாக நடந்த சிபிஐ விசாரணையில் சுரேஷ் கல்மாடி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சுரேஷ் கல்மாடி சுமார் 10 மாத காலம் சிறையில் இருந்து பின்னர் ஜாமினில் வெளியே வந்துள்ளார்.

இந்நிலையில் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் பொது கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சுரேஷ் கல்மாடி மற்றும் அபே சிங் சவுதாலா ஆகியோர் இந்திய ஒலிம்பிக் சங்க கவுரவ ஆயுட்கால தலைவர்களாக நியமிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. இது நாட்டு மக்களிடையேயும் அரசியல் தலைவர்களுக்குகுள்ளும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.  

இதுபோல் சர்ச்சையில் சிக்குவது  இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு ஒன்றும் புதியது அல்ல இதற்கு முன்னரும் சவுதால மற்றும் லலித் பனோத் தேர்வு செய்யப்பட்டபோது. அந்த அமைப்பையே சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி இடைநீக்கம் செய்ததும். அவர்களை விளக்கியபிரகே சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தன் நடவடிக்கையை தளர்திகொண்டதும் நினைவுகூர தக்கதாகும்.

இந்தியாவின் அடையாளமாக திகழும் ஒரு மாபெரும் அமைப்பின் மாண்பை கெடுக்கும் விதத்தில் அதன் உறுபினர்கள் இவ்வாறு நடந்துகொள்வதை பார்க்கும்போது தற்போது அந்த அமைப்பு ஊழல் பெருச்சாளிகளின் புகளிடமாகிறதோ என கருதவேண்டியுள்ளது. இவ்வ்று செய்வதால் சர்வதேச அளவில் இந்திய ஒலிம்பிக் சங்கம் தன் பெயரை கெடுத்துக்கொல்கிறது என்றே தெரிகிறது.