இந்திய ஒலிம்பிக் சங்கம் இடைநீக்கம் விளையாட்டு அமைச்சகம் அதிரடி

சில தினங்களுக்கு முன்பு இந்திய ஒலிம்பிக் சங்கம் ( IOA ) கல்மாடி மற்றும் சவுதாலாவை ஆயுட்கால தலைவர்களாக நியமித்திருந்தது. நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த நியமனத்திற்கு எதிராக பல்வேறு காட்சிகளில் இருந்து கண்டனங்கள் எழுந்தன. மதிய விளையாட்டு துறை மந்திரியும் கன்டனம் தெரிவித்ததோடு விளையாட்டு துறை அமைச்சகமும் நேரில் வந்து விளக்கம் அளிக்கும்படி நோட்டிஸ் அனுப்பிருந்தது. நேற்றைக்குள் பதில் தர கெடு விதித்திருந்தது. இதில் கல்மாடி மட்டும் பதவியை ஏற்க மறுத்துவிட்டார். ஆனால்  சர்வதேச ஒலிம்பிக் சங்கம் சொன்னால் மட்டுமே ராஜினாமா செய்வேன் என்று சவுதாலா பதவியை ஏற்பதில் உறுதியாக உள்ளார்.

இந்நிலையில் இந்திய ஒலிம்பிக் சங்கத்திலிருந்து (IOA)  எந்த பதிலும் வராததால்  மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் IAO மீது அதிருப்தியடைந்துள்ளது அதனால்  IOA 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டுள்ளது. அங்கீகாரம் ரத்தானதால்,  இனி மத்திய அரசிடம் இருந்து IOA., -க்கு நிதி மற்றும் இதர சலுகைகளை கிடைக்காது.

மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல் கூறுகையில்,' தவறான செயல்பாடுகளை அரசாங்கம் ஒரு போதும் அனுமதிக்காது,  கல்மாடி, சவுதாலாவை கவுரவ ஆயுட்கால தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டும். இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்வரை, IOA 'சஸ்பெண்ட்' செய்யப்படுகிறது,' இப்போதில் இருந்து நிதி உதவி, சிறப்பு சலுகைள் எதையும் இந்திய ஒலிம்பிக் சங்கம் அரசிடம் இருந்து பெற முடியாது’ ' என்றார்.

முன்னதாக, இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அசோசியேட் துணைத்தலைவர் நரிந்தர் பாத்ரா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது