ஆஸ்துமா குணமாக, நுரையீரல் நோய்கள் நீங்க தூதுவளை.

தாவர விளக்கம்

மூலிகையின் பெயர் : 

தூதுவேளை

ஆங்கிலப் பெயர்: 

Solanum Trilubatum

வேறுபெயர்கள்: 

தூதுவளை, தூதுளம், தூதுளை

தாவரக்குடும்பம்: 

Solanaceae

அடையாளம்: 

தமிழகம் எங்கும் தன்னிச்சையாக வளரகூடிய ஏறு கொடி. வறட்சியை தாங்கக்கூடியது. கிராமங்களில் வீட்டுத் தோட்டத்திலும் வேலிகளிலும் வளர்ப்பதுண்டு. முட்கள் நிறைந்த தண்டினையும், முட்கள் நிறைந்த இலைகளையும் உடையது, இலைகள் பார்பதற்கு கோவை இலைபோல் இருக்கும். பூக்கள் ஊதாநிறத்திலும்,  சுன்டைக்காய் போன்று உருண்டையான பச்சை நிறக் காய்களும் இருக்கும், பழங்கள் பழுத்தவுடன் சிவப்பாக மாறும். இது விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

 

மருத்துவக் குணங்கள்: 

காதுவலி கொண்டவர்கள்  தூதுவேளை இலையைப் பிழிந்து எடுத்து சாற்றை 1 அல்லது 2 துளி காதில் விட்டால், காதுவலி, காதில் சீழ் வடிதல் குணமாகும்.

இலையை நெய்யில் வதக்கி துவையலாகவோ அல்லது  குழம்பாகக் கடைந்தோ சாப்பிட கபக் கட்டு நீக்கி உடல் பலமும் அறிவுத் தெளிவும் உண்டாகும்.

இலைச் சாற்றை சம அளவு நெய்யில் காய்ச்சிக் காலை மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டுவர என்புருக்கிக் , காசம் மார்புச் சளி நீங்கும்.

சுண்ட வற்றல் போல் தூதுவளை காயை உலர்த்தித் தயிர் அல்லது மோர், உப்பு ஆகியவற்றில் பதப்படுத்தி, பனி மற்றும் மழைக்காலங்களில்,  எண்ணெயில் வறுத்து உண்டுவர நுரையீரல் வலுவடையும். மனநிலை தடுமாற்றம், இதய பலவீனம்,  மலச்சிக்கல் ஆகியவை நீங்கும்.

சமூலத்தை (வேர், இலை, பூ, காய்) 50 கிராம் அரை லிட்டர் நீரில் போட்டு நான்கில் ஒரு பங்காக காய்ச்சி காலை மாலை பருகி வர இரைப்பு, சுவாச காசச் சளி ஆகியவகை தீரும்.

நாள்தோறும் 10 பூவைக் காய்ச்சிப் பால், சர்க்கரைக் கூட்டி ஒரு மண்டலம் (45 நாட்கள்) பருக உடல் பலம், முக வசீகரம், அழகும் பெறலாம்.

தூதவேளை, கண்டங்கத்திரி, பற்படாகம், விஷ்ணுகாந்தி வகைக்கு ஒருபிடி ஒரு லிட்டர் நீரில் போட்டு 8-ல் ஒன்றாய் காய்ச்சி (தூதுவேளைக் குடிநீர்) ஒரு மணிக்கு ஒருமுறை 5 மி.லி முதல் 10 மி.லி வரை கொடுத்து வரக் நிமோனியா, டைபாய்டு குறையும்.

தூதுவேளை, கண்டங்கத்திரி, திப்பிலி, இண்டு வேர் சேர்த்து 500 மி.லி தண்ணீர் ஊற்றி 100 மி.லி ஆக சுண்ட வைத்துச் சாப்பிட்டால் ஆஸ்துமா குணமடையும்.

தைராய்டு கட்டிகள் தோன்றியவுடன் தூதுவளையைப் பயன்படுத்தினால் நிரந்தரத் தீர்வு காணலாம். தூதுவளை இலையை சேகரித்து சுத்தம் செய்து, பதினைந்து முதல் ஐம்பது கிராம் வரை எடுத்து, ஊற வைத்த அரிசி சேர்த்து அரைத்து ரொட்டியாகத் தயாரித்து காலை உணவாக மூன்று ரொட்டிக்குக் குறையாமல் இரண்டு மாதங்கள் சாப்பிட்டால், பூரண குணம் ஏற்படும். முதல் பதினைந்து தினங்கள் முதல் தொண்டைவலி குறைய ஆரம்பிக்கும். பிறகு படிப்படியாக நோய் நிவாரணம் அடையும்.

ஒவ்வாமையின் விளைவாகவே பெரும்பாலும் ஆஸ்துமா ஏற்படுகிறது. தூசு, குளிர்ந்த காற்று, புகை, மூச்சுப்பாதையில் ஏற்படும் தொற்றுகள், ரசாயனப் பொருட்கள், புகைபிடித்தல், மகரந்தங்கள், வளர்ப்புப் பிராணிகளின் முடிகள், வாசனைத் திரவியங்கள் போன்றவை ஏற்படுத்தும் ஒவ்வாமையின் விளைவுதான் ஆஸ்துமாவின் வெளிப்பாடு.

அறிகுறிகள்:

சளியுடனோ அல்லது சளி இல்லாமலோ இருமல் தொடர்ந்து இருக்கும். ஒரு சுவாசத்துக்கும் அடுத்த சுவாசத்துக்கும் இடைப்பட்ட நேரம் குறைந்து காணப்படும். இழுப்பானது அதிகாலை மற்றும் இரவில் அதிகமாக இருக்கும்.

முசுமுசுக்கை இலைப்பொடி, மற்றும் தூதுவளை இலைப் பொடி சம அளவு கலந்து, அதில் அரை ஸ்பூன் தேன் சேர்த்து உண்ணலாம்.

தூதுவளை இலை 15 கிராம் அளவில் சேகரித்து 500 மில்லி தண்ணீரில் போட்டு 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 முதல் 40 மில்லி வரை ஒரு நாளைக்கு மூன்று வேளை இந்த கஷாயத்தைச் சாப்பிட்டு வந்தால், இருமல், இரைப்பு, சளியுடன் கூடிய காய்ச்சல், சயரோகக் காய்ச்சல் குணமாகும்.

தூதுவளையை வாரத்தில் இரண்டு தினங்களாவது சாப்பிட்டு வந்தால் நோய்த் தடுப்பாகவும், நோய் தீர்க்கவும் பயன்படும். இம்முறையில் பயன்படுத்தினால் நுரையீரல் நோய்கள் வராமல் நுரையீரல் பாதுகாக்கப்படும். ஆஸ்துமா, ஈசனோபீலியா நோய் வராமல் தடுப்பு மருந்தாகவும், வந்தபின் நோய் நீக்கவும் பயன்படுகிறது.

மேலும், இதை பயன்படுத்துவதால் மூளை நரம்புகள் வலிமையடைகின்றன. இதனால் நினைவாற்றல் பெருக உதவியாக இருக்கிறது.

இப்பொடியுடன் திப்பிலிப் பொடியை சமமாக சேர்த்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால், இருமல் உடனே நின்று விடும்.
பசும்பாலில் இப்பொடியைச் சேர்த்து சாப்பிட்டால் பித்த நோயால் ஏற்படும் மயக்கம் தீரும். இப்பொடியை எருமை மோரில் கலந்து சாப்பிட்டால் இரத்த சோகை நீங்கி இரத்த விருத்தி உண்டாகும்.

தண்ணீரில் கலந்து சாப்பிட்டால் செய்யான் கடி விஷம் தீரும்.
தூதுவளை இலையை நெய்யில் வதக்கி, துவையல் செய்து வாரத்தில் இரண்டு நாளாவது பயன்படுத்தினால் வாயுவைக் கண்டிக்கும். உடல் வலிமை ஏற்படும். மூலரோகப் பிணிகள் குறையும். தாம்பத்ய உறவு மேம்படும்.