ஆள் பாதி ஆடை பாதி

ஆள்பாதி ஆடை பாதி என்பதிர்கேர்ப்ப இன்றைய உலகில் ஒருவரின் வெற்றி தோல்விக்குகூட ஆடையின் பங்கு முக்கியமானதாகும். உடலம்மைப்புக்கு ஏற்ற உடை அணியவில்லையென்றால், அது அவர்களுக்கு அழகாக அமையாது. அவாறவர் உடலம்மைப்புக்கு ஏற்றவாறு உடையணிந்தால் பார்பதற்கு அழகாக இருக்கும்.

நடைமுறையில் இன்றைய பெண்கள் பேஷனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். மேலும் தங்களுக்கு ஏற்ற உடை, ஆபரணம், மற்றும் கலர் தெரிந்து கொள்வதில் மிகவும் ஆர்வமாக உள்ளார்கள். அவர்களுக்காக இதே சில டிப்ஸ்

பொதுவாக பெண்கள் எல்லோருமே தங்களை ஸ்லிம்மாகக் காட்டிக் கொள்ளத்தான் மிகவும் விரும்புவார்கள். அதற்கு மிகவும் சிறந்தது டார்க் கலர்தான். லைட் கலர்கள் ஒரு ஸ்லிம்மான  பெண்ணைக் கூட கொஞ்சம் குண்டாகக் காட்டும். எனவே ஸ்லிம்மான பெண்கள் லைட் கலர்கள் உடைகளை உடுத்த வேண்டாம்.

உயரமாகவும், ஒல்லியாகவும் உள்ள பெண்கள் குறுக்கே கோடுகள் போட்ட உடைகளையோ அல்லது பெரிய டிசன்கள் உள்ள உடைகளையோ அல்லது பெரிய பார்டர்கள் போட்ட உடைகளை அணிந்ததால்  பார்க்க அழகாக இருக்கும்.

குட்டையாகவும் ஒல்லியாகவும் இருக்கும் பெண்கள் ப்ளைன் அல்லது டிசைன்கள் இல்லாத ஆடைகளை அணியவேண்டாம். ஒல்லியாக இருப்பவர்கள் சற்று சுருக்கு வைத்த ஆடைகளை அணியலாம்.

குண்டாக இருப்பவர்கள் உடலோடு ஒட்டிய ஆடைகளை அணியவேண்டாம். டாப்சும் பாட்டமும் வெவேறு நிறங்களில் இருக்குமாறு தேர்வுசெய்து அணியலாம். துப்பட்டாவை தவிர்க்கலாம். சிறிய டிசன்கள் உள்ள உடைகளையும், சிறிய கோடுகள் போட்ட உடைகளையும், மிடியில் முன்பக்கம் பட்டையாக அடிநுனிவரை தைத்து அதில் பூவேலை செய்தால் பார்பதற்கு சற்று உயரமாக காட்டும்.  அகலம் குறைவாக உள்ள பார்டர்கள் போட்ட உடைகள் அணிவது அழகாகவும், ஒல்லியாகவும் தெரியும்.

குட்டையாக இருப்பவர்கள் உயரமான காலணிகளை தேர்வுசெயலாம்.

சிவப்பாக இருக்கும் பெண்களுக்கு டார்க் கலரும், கருப்பாக இருக்கும் பெண்களுக்கு லைட் கலரும் பொருத்தமாக இருக்கும் என்ற  கருத்து உள்ளது ஆனால் அது மிகவும் தவறு. கருப்பாக இருக்கும் பெண்கள் லைட் கலர் உடை அணிந்தால், அவர்கள் மேலும் கருப்பாகத் தெரிவார்கள். ஆனால் சிவப்பாக இருக்கும் பெண்கள் லைட் கலர் அணிந்தால் மேலும் அழகாகத் தெரிவார்கள். கருப்பான பெண்களுக்கு ஓவர் லைட்டாகவும் இல்லாமல், ஓவர் டார்க்காவும் இல்லாமல் இருக்கும் மீடியமான கலர்கள் தான் மிகவும் சிறந்தது. உதாரணமாக கருப்பான பெண்கள் புளூ கலர் உடைகளை அணிந்தால் பார்க்க மிகவும் அழகாகவும்,கலராகவும் தெரிவார்கள்.

மிகவும் உயரமான பெண்கள் மிகவும் உயரமான கொண்டை போட்டுக் கொள்ளக் கூடாது. சிறிது குள்ளமான பெண்கள் கொண்டையச் சிறிது கூர்மையாகவும், உயரமாகவும் போட்டுக் கொண்டால் பார்க்க அழகாக இருக்கும். அதே போல் வட்டமான முகம் உள்ளவர்களும் சிறிது உயரமான கொண்டை போட்டுக்கொள்ளலாம்.

உயராமாக உள்ளவர்கள் நீளமாக தொங்ககூடிய ஆபரணங்களை அணியாமல் கழுத்தில் ஒட்டியிருக்கும்படி நெக்லஸ் வகைகளை அணியலாம். குட்டையான பெண்கள் கழுத்தை ஒட்டிய நகைகளை அணியாமல் சற்று தளர்ந்த நெக்லஸ்களை அணியவேண்டும்.