ஆந்திரா பெசரட்டு தோசை செய்வது எப்படி?

இன்று நாம் பார்க்க இருப்பது ஆந்திர சைவ சமையல்.

பச்சைப் பயறு/பாசிப்பருப்பினால் தோசை செய்து அதன் மேல் பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயத் துண்டுகளைத் தூவி எடுப்பது பெசரட்டு ஆகும். தமிழ் நாட்டு தோசையைப் போன்றது. ஆந்திராவில் மிகவும் பிரபலமானது இந்த பெசரட்டு எனப்படும் முழு பச்சைப் பயறு கொண்டு செய்யப்படும் தோசையாகும்.
 

தேவையான பொருட்கள் :-

பச்சைப் பயறு - 2 கப்
பச்சரிசி - சிறிதளவு

பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - சிறு துண்டு
சீரகம் - 1 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு
பெருங்காயம் - சிறிதளவு

கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - சிறிதளவு.

செய்முறை:-

  • பச்சைப்பயறையும் அரிசியையும் நன்கு கழுவி இரண்டையும் ஒன்றாக்கி 6 மணிநேரம் ஊறவைக்கவேண்டும்.
  •  1 பச்சைமிளகாய், இஞ்சி, ஒரு வெங்காயம், பெருங்காயம் சேர்த்து அரைத்து அதனோடு தேவையான அளவு உப்பு சேர்த்துக் கரைத்து கொள்ளுங்கள்.
  • இன்னொரு வெங்காயத்தையும், மீதமுள்ள பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய்விட்டு என்னை காய்ந்ததும்  சீரகம், வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கி அதையும் மாவில் கலந்துகொள்ளவும்.
  • இப்பொழுது தோசைக்கல்லில் லேசாக எண்ணெய் தேய்த்து மாவை ஊற்றி மெலிதாக பரப்பி வேகவைக்கவும்.

 அவ்வளவு தான் கமகமக்கும் ஆந்திர ஸ்பெஷல் பெசரட்டு தயார். உங்களுக்கு பிடித்த  தேங்காய் சட்னி அல்லது இஞ்சி சட்னியோடு  தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும்.