ஆண்மையை அதிகரிக்க, தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க - நத்தைச் சூரி

தாவர விளக்கம்

மூலிகையின் பெயர் : 

நத்தைச் சூரி

ஆங்கிலப் பெயர்: 

Spermacoce hispida

வேறுபெயர்கள்: 

குழி மீட்டான், தாருணி, கடுகம், நத்தைச்சுண்டி, தொலியாகரம்பை

தாவரக்குடும்பம்: 

RUBIACEAE

அடையாளம்: 

நத்தைச் சூரி தமிழகத்தில் சாலையோரங்களில், மணற்பாங்கான மற்றும் செம்மண் பூமிகளில் வளரக்கூடிய தாவரம். இது, பூண்டு வகையைச் சேர்ந்த தாவரமாகும். தண்டுகள் நான்கு பட்டையாக இருக்கும். பச்சை நிற சுனையுடைய இலைகள் எதிரடுக்கில் அமைந்திருக்கும். இலை ஒரு அங்குல நீளமும் அரை அங்குல அகலமும் கொண்டு சற்று நீள்வட்டத்தில் இருக்கும். சிறிய குழல் வடிவ ஊதா நிரபூக்களை கொண்டிருக்கும்.

மருத்துவக் குணங்கள்: 

இதில்  கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளதால்.  சித்த மருத்துவத்தில், எலும்பு தொடர்பான நோய்களைப் போக்கும் மருந்தாக இதை பயன்படுத்தியுள்ளனர்.

நத்தைச் சூரியின் விதைகளை, சட்டியில் போட்டு, பொன் வறுவலாக வறுத்து, பொடி செய்து, நீரில் கலந்து சுண்டவைத்து, அத்துடன், ஒரு டம்ளர் பசும்பால் கலந்து, இரண்டு வேளை தொடர்ந்து குடித்து வந்தால், உடம்பில் பற்றியுள்ள  ஊளைச் சதை குறையும். ஆண், பெண் இருவருக்குமுள்ள, வெள்ளை நோய், வெட்டை நோய் குணமாகும்.

பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் உண்டாகும், அதிக உதிரப் போக்கைத் தடுக்கும். வெள்ளைப் படுதலை குணமாக்கும். 10 கிராம் நத்தை சூரி வேரை, காயவைத்து, பொடியாக்கி, பசும்பாலில் கலந்து, கொதிக்க வைத்து அருந்தி வந்தால், தாய்ப்பால் பெருகும்.

நெருஞ்சி போன்று ஆண்களுக்கு அதிகம் பயன்தரக்கூடிய மூலிகையாகும். இதன் வேரை பத்துநாட்கள் காலையில் மட்டும் உட்கொண்டுவர,  நலிந்த உடலைத் தேற்றும், விந்து பலத்தை அதிகரிக்கும், கெட்டிப்படுத்தவும் செய்யும், இதனால் விந்து முந்துதலை தடுக்கவும் பயன்படுகிறது.

விதை தாதுக்களின் எரிச்சலைத் தவிர்க்கவும், தாது வெப்பத்தைத் தணிக்கவும் பயன்படுகின்றது. நத்தைச் சூரி விதையை அரைத்து, நெல்லிக்காயளவு எடுத்து,  ஒரு டம்ளர் பாலுடன் கலந்து, 2 வேளை சாப்பிட்டு வர, உடல் பலமடையும்; ஆண்மை பலம் அதிகரிக்கும்.

சிலருக்கு ஏதாவது நோய் வந்து குனமானபின்பும் நோயின் தாக்கத்தால் உடல் சோர்வாக காணப்படுவர் அவர்கள் நோயின் பாதிப்பிலிருந்து விடுபட்டு உடல் தேற  நத்தைச்சூரியின் விதையைப் பொடித்து தினமும் 1 ஸ்பூன் அளவு எடுத்து தேனில் குழைத்து சாப்பிட்டு வரவேண்டும்.  இதனால் நோயின் தாக்கம் குறைவதுடன் உடலும் வலுப்பெறும்

நத்தைச் சூரியின் விதையை, லேசாக வறுத்து பொடியாக்கி, ஒரு ஸ்பூன் அளவு எடுத்து பசும் பாலில் கொதிக்க வைத்து, அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து, காலை, மாலை அருந்தினால், உடல் சூடு தணிவதுடன், உடலில் உள்ள, தேவையற்ற, ரசாயன வேதிப் பொருட்களை வெளியேற்றி, சிறுநீரகக் கல்லடைப்பை தடுக்கும். மேலும், ரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.

நத்தைச்சூரி வேர், நாயுருவி வேர், வன்னிவேர், உத்தாமணி வேர், தூதுவளை வேர், விளாவேர், பாகல் வேர், வேப்பம்பட்டை, கடுக்காய், மிளகு, வெள்ளுள்ளி, வசம்பு, திப்பிலி, குப்பைமேனி, துத்திவேர் இவற்றை சம அளவு எடுத்து இடித்து 1 லிட்டர் நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி வைத்துக்கொண்டு அடிக்கடி உடலில் தேய்த்து வந்தால் சரும பாதிப்பு நீங்குவதுடன் உடல் சூடு தணியும்.  தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வது குறையும்.

கண்களில் துசி விழுந்து உறுத்தினால் இதன் பூவை பிழிந்து சாறெடுத்து பதிக்கப்பட்ட கண்ணில் மூன்றுவேளை விட கடுமையான வலியும், எரிச்சலும், உறுத்தலும்  குறையும்.