அதிருப்த்தியாலர்களை வழிக்கு கொண்டுவருவது எப்படி -சசிகலா ஆதரவாலர்களுண்டன் சந்திப்பு.

கடந்த டிசம்பர் 31 அன்று  அ.தி.மு.க. பொது செயலாளர் சசிகலா பொது செயலாளராக பொபேற்றுக்கொண்டார். சசிகலாவை ஏற்றுக் கொள்ளாத, கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் உள்ள, இரண்டாம் கட்ட நிர்வாகிகள், பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர்.  சில இடங்களில் போராட்டங்களும் நடந்தேறின.

இந்நிலையில் சசிகலா தனது அடுத்த காயை நகர்த்தியிருக்கிறார் என்றே தெரிகிறது. அதன் வெளிப்பாடே இன்று தம்பிதுரையின் அறிக்கை என்று கூறப்டடுகிறது. இன்றைய நிலையில் அவருக்கு முதலமைச்சர் ஆவது ஒன்றும் மிகப்பெரிய காரியம் இல்லை ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையில் முதலமைச்சரானால் தன்னை ஏற்றுக்கொள்ளாத  அடிமட்ட தொண்டர்களின் எதிர்ப்பு எவ்வாறு இருக்குமோ என்று அஞ்சுகிறார். இதை அறிவதர்க்காகவும், அதிருப்தியாளர்களை வழிக்கு கொண்டுவருவதைப் பற்றியும் மாவட்ட வாரியாக உள்ள நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்த உள்ளார்.  அதன்படி வருகிற ஜனவரி 4ந்தேதி முதல் 9ந்தேதி வரை மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்கிறார்.

அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பிற்கு மாவட்டத்திற்குட்பட்ட ஊராட்சி, பேரூராட்சி மற்றும் ஒன்றியம் உள்ளிட்ட அனைத்து செயலாளர்களுக்கும் அழைப்பு விடப்பட்டுள்ளது.  மாவட்டத்திற்குட்பட்ட நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடப்பட்டுள்ளது.

அணைத்து மாவட்ட கூடத்திற்குப் பின் நேரடியாக முதல்வர் ஆவாரா அல்லது எம்.எல்.ஏ-வாக ஜெயித்து மக்களின் ஆதரவோடு வருவாரா என்பது தெரியும்.