அட்டக்கத்தி, மெட்ராஸ் - பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி.

ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சூப்பர்ஸ்டார் ரஜினி நடிக்க ஒரு படத்தை தான் தயாரிக்க வேண்டும் என்ற கனவில் இருந்த கலைப்புலி எஸ்.தாணுவிற்கு தற்போது அந்த கனவு நிறைவேறியுள்ளது. மாறிவரும் காலத்திற்கேற்ப தன்னையும் மாற்றிக்கொண்டு புதுபுது முயற்சிகளை துணிச்சலாக செய்பவர் ரஜினிகாந்த் , ஆறிலிருந்து அறுவதுவரை, எங்கேயோ கேட்டகுரல் போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார் எந்திரனிலும் கலக்கியிருகிறார். ஒரு அதிரடி மாற்றமாக, தொடர்ந்து பெரிய இயக்குனர்களின் படங்களிலேயே நடித்துகொண்டிருந்தவர் அடுத்து  இளம் இயக்குனரான ’அட்டக்கத்தி’, ‘மெட்ராஸ்’ படங்களை இயக்கிய பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கிறார் என்கிற அதிகாரபூர்வ தகவல் வெளியாகி திரையுலகை பிரமிக்க வைத்துள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு இன்று வெளியிட்டுள்ளனர். இப்படத்துக்கு சந்தோஷ்நாராயணன் இசையமைக்கிறார். ’மெட்ராஸ்’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்த முரளி ஜி இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். பாடல்கள் கபிலன், உமாதேவி, கானா பாலா, கலை, இயக்கம் ராமலிங்கம், படத்தொகுப்பு - பிரவீன் கே.எல். ,சண்டைப்பயிற்சி அன்பு ,அறிவு, நடனம் - சதீஷ், ஒலி வடிவமைப்பு ரூபன்.

ஆகஸ்ட் மாதம் மலேஸியாவில் படப்பிடிப்பு தொடங்கி,  தாய்லாந்து, ஹாங்காங்க் மற்றும் சென்னையில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. தற்போது இப்படத்தின் அடுத்த கேள்வி ஹீரோயின் , மற்ற நடிகர்கள் யார் என்பதே எனவே கதாநாயகி உட்பட படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது