பிற விளையாட்டு

இந்திய ஒலிம்பிக் சங்கம் இடைநீக்கம் விளையாட்டு அமைச்சகம் அதிரடி

சில தினங்களுக்கு முன்பு இந்திய ஒலிம்பிக் சங்கம் ( IOA ) கல்மாடி மற்றும் சவுதாலாவை ஆயுட்கால தலைவர்களாக நியமித்திருந்தது. நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த நியமனத்திற்கு எதிராக பல்வேறு காட்சிகளில் இருந்து கண்டனங்கள் எழுந்தன. மதிய விளையாட்டு துறை மந்திரியும் கன்டனம் தெரிவித்ததோடு விளையாட்டு துறை அமைச்சகமும் நேரில் வந்து விளக்கம் அளிக்கும்படி நோட்டிஸ் அனுப்பிருந்தது. நேற்றைக்குள் பதில் தர கெடு விதித்திருந்தது. இதில் கல்மாடி மட்டும் பதவியை ஏற்க மறுத்துவிட்டார். ஆனால்  சர்வதேச ஒலிம்பிக் சங்கம் சொன்னால் மட்டுமே ராஜினாமா செய்வேன் என்று சவுதாலா பதவியை ஏற்பதில் உறுதியாக உள்ளார்.

இந்திய ஒலிம்பிக் சங்க ஆயுட்கால தலைவர் பதவியை ஏற்க சுரேஷ் கல்மாடி மறுப்பு .

மத்திய விளையாட்டு துறை அமைச்சகத்தின் அழுததால்  இந்திய ஒலிம்பிக் சங்க ஆயுட்கால தலைவர் பதவியை ஏற்க சுரேஷ் கல்மாடி மறுப்பு .

கடந்த 2010-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு அரங்கம் அமைப்பதிலும், விளையாட்டுச் சாதனங்கள் வாங்கியதிலும் ரூ90  ஊழல் நடைபெற்றதாக புகார் எழுந்தது.  இதன தொடர்ச்சியாக நடந்த சிபிஐ விசாரணையில் சுரேஷ் கல்மாடி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சுரேஷ் கல்மாடி சுமார் 10 மாத காலம் சிறையில் இருந்து பின்னர் ஜாமினில் வெளியே வந்துள்ளார்.