மகளிர் நலம்

அழகுப் பொருட்களால் ஏற்படும் உடல்நல அபாயங்கள்!!!

நாம் எப்போதுமே அழகாக காட்சியளிக்க வேண்டும் என்றே விரும்புவோம். அதனால் தான் நம்மில் பலரும் அழகு சாதன பொருட்களையும் செய்முறைகளையும் பயன்படுத்துகிறோம். இதனால் உங்கள் அழகு மெருகேறும். ஆனால் அதனோடு சேர்ந்து சில தொற்றுக்கள் மற்றும் நோய்களும் கூட உங்களை வந்தடையும். பார்லர் மற்றும் வீட்டினில் மேற்கொள்ளும் அழகு சிகிச்சைகளால் உங்களுக்கு கிடைக்க போகும் நன்மைகள் மற்றும் தீமைகளை தெரிந்து கொள்வது மிகவும் முக்கியமாகும். உங்கள் அழகு செயல்முறை உங்களுக்கு எப்படி தீமையை ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா?

பட்டுப்போன்ற மென்மையான முடி வேண்டுமா?

அழகை அதிகரித்துக் காட்டும் விஷயங்களில் ஒன்று தான் முடி. இந்த முடி சிலருக்கு வறட்சியாகவும், நார் போன்றும் இருக்கும். இதனால் பலரும் தங்கள் முடியை நினைத்து கஷ்டப்படுவார்கள். மேலும் தங்கள் முடியை மென்மையாக்க கடைகளில் விற்கப்படும் ஷாம்பு மற்றும் கண்டிஷனர்களைப் பயன்படுத்துவார்கள். இருப்பினும் அந்த கண்டிஷனர்களின் சக்தி வெறும் இரண்டு நாளைக்கு தான். பிறகு என்ன மீண்டும் நார் போன்று மாறிவிடும். கெமிக்கல் பொருட்களைப் பயன்படுத்தினால், முடி தற்காலிகமாகத் தான் பலனைத் தருமே தவிர, நிரந்தர தீர்வைத் தராது.

முக அழகை கெடுக்கும் டென்ஷன்

மனிதர்களில் இரண்டு ரகம் உள்ளது. எப்பொழுது பார்த்தாலும் சிரித்த முகத்துடன் எதையும் டேக் ஈசியாக எடுத்துக்கொள்பவர்கள் ஒரு ரகம்.

எதற்கெடுத்தாலும் டென்சன் ஆகி கத்தித் தீர்ப்பவர்கள் ஒரு ரகம். டேக் இட் ஈசி ரக ஆட்கள் என்றைக்கும் ஒரே மாதிரி இருப்பார்கள்.

அவர்களின் அழகு என்றைக்குமே மாறாது. உடல்நலத்திற்கும் எந்த தீங்கும் ஏற்படாது.

காரணம் அவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் எப்போதும் சந்தோஷத்துடன் இருப்பதுதான். ஆனால் இரண்டாவது ரகமான டென்சன் பார்ட்டிகள் அழுது வடிந்து கொண்டு, வயதான தோற்றத்திற்கு தள்ளப்பட்டு விடுவார்கள். நோயும் எளிதில் தாக்கத் தொடங்கிவிடும்.

Pages