குழந்தை வளர்ப்பு

பிறந்த குழந்தைக்கு உணவூட்டும் முறைகள்

குழந்தைக்கு உணவூட்டும் முறை

குழந்தை பிறந்தவுடன் 6 மணி நேரத்திற்குள் சீம்பால் கொடுக்க வேண்டும். அது நம் குழந்தையின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் எனவே சத்து நிறைந்த சீம்பாலை நாம் கண்டிப்பாக நம் குழந்தைக்கு அளிக்க வேண்டும்.

குழந்தை பிறந்த 6 மாதங்களுக்கு கண்டிப்பாக தாய்ப் பால் மட்டுமே கொடுக்க வேண்டும். கூடுமானவரை பார்முலா பால் கொடுப்பதை தவிர்க்கவும்.  ஓவ்வொரு முறை பாலுட்டும் போதும் தாய்மார்கள் சூடாக சூப் அல்லது குழந்தையின் நலனுக்கு பாதிப்பு உண்டாக்காத ஒரு பானத்தை குடித்து கொண்டு பாலுட்டுவது நல்லது.

குழந்தை பிறப்பதற்கு முன்

நாம் என்னன்ன உணவுகளை எடுத்துகொண்டால்  நம் குழந்தைக்கு எப்படி நல்ல ஆரோக்கியத்தை தரலாம் என்று முந்தய பதிவில் பார்த்தோம்,  குழந்தைக்கு ஆரோக்கியத்தை மட்டும் கொடுத்தால் போதாது. இதையும் தாண்டி அவர்களை நல்ல மனிதர்களாக, அறிவாளிகளாகவும் திகழ கிழ்கண்டவற்றையும் பின்பற்றவேண்டும் வேண்டும்.

கர்பிணிப்பெண்களின் கவனத்திற்கு

இன்றைய காலகட்டத்தில் பலரும் நேரமில்லை என்ற காரணத்தை கூறி பின்னாளில் வரப்போகும் ஆபத்துகளை அறியாமல்  மாத்திரை மருந்துகளைப் பயன்படுத்தியே உடலைப் பேணிக்காக்க விரும்புகின்றனர். இவர்களின் அறியாமையை  பயன்படுத்திக்கொள்ள நினைக்கும் மருத்துவர்கள் வகைவகையாய் எழுதிக்கொடுக்கும் தேவையில்லாத மருந்துகள் உடலின் இயக்கத் தன்மையை மாற்றிவிடுகின்றது.  சாதாரணப் பெண்களைவிட கருவுற்ற பெண்களுக்கு சற்று கூடுதலாக சத்துக்கள் தேவைதான்,  இயற்கையான முறையில் சத்துக்களை பெற பல வழிகள் இருக்கும்போது நாம் என் மாத்திரைகளை நம்பவேண்டும்.

Pages