குழந்தை வளர்ப்பு

6 மாதம் முதல் 1 வயது வரை அளிக்க வேண்டிய பயிற்சிகள்

குழந்தையின் உடல் ஆரோக்கியத்திற்கு.

6 மாதங்களுக்கு பிறகு 11 மணி மற்றும் மலை 3 மணி ஆகிய நேரங்களில் நன்கு வேகவைத்து மசித்த காய்கறிகளை ஒரு வேளையும், பழங்களை ஒரு வேளையும் கொடுக்கலாம்.

9வது மாதம் முதல் காலையில் இட்லி, இடியாப்பம் ஆகியவற்றை நெய் சேர்த்து கொடுத்துப் பழகலாம்.

10வது மாதம் முதல் காலை டிபன் கொடுப்பதோடு மதியம் கொந்தம் சாதம் குழைத்து பருப்பு, நெய் ஆகியவற்றைக் கலந்து கொடுத்துப் பழக்க வேண்டும்.

11வது மாதம் முதல் காலை உணவுக்கு முன் கஞ்சி கொடுக்கலாம்.

பச்சிளம் குழந்தைகளுடன் உரையாடுங்கள்.

பிறந்த நிமிடம் முதலே தாயின் வாசனையையும் தொடுதலையும் விரும்புகிறது, குழந்தை அம்மாவுடனே தூங்க விரும்புகிறது. அம்மா தன் அருகில் இல்லை என்பதை ஒரு சின்ன அசைவில் இருந்துகூட அது கண்டு கொண்டு விடுகிறது. அடுத்த கணம் அது அழுது தன் கண்டுபிடிப்பை உறுதி செய்து கொள்கிறது. அம்மாவின் குரலை கேட்டபிறகே அழுகையை நிறுத்துகிறது. குழந்தை தூங்கும் வரை, அதன் அருகில் அரவணைத்தபடி பால் கொ டுத்துவிட்டு, தூங்கியதும், புடவையில் கட்டிய தூளியில் போடலாம்.

குழந்தைகளை குளிக்கவைக்கும் கலை

பிறந்த பச்சிளங் குழந்தைகளை குளிக்க வைக்கும் போது ரொம்ப மிகுந்த கவனம் தேவை.  

குழ‌ந்தையை ‌நீ‌ங்க‌ள் கு‌ளி‌க்க வை‌க்கு‌ம் போது தொ‌ப்பு‌ள் கொடிமீது ‌சில சொ‌ட்டு தே‌ங்காய‌் எ‌ண்ணெ‌ய் வை‌த்த ‌பிறகு கு‌ளி‌ப்பா‌ட்டினா‌ல் ஈர‌த்‌தினா‌ல் ‌சீ‌ழ் ‌பிடி‌ப்பது த‌வி‌ர்‌க்க‌ப்படு‌ம்.

Pages