அழகு குறிப்புகள்

முடியின் வேற்பகுதியை பராமரிப்பது எப்படி

பெரும்பாலானோர் முடிகளின் வெளிப்பகுதியை அழகாகவும், பளபளப்பாகவும் வைத்திருந்தால் மட்டுமே போதும் என்று நினைப்பார்கள். ஆனால் முடிகள் வளரும் இடமான முடியின் வேர்களான மயிர் கால்களைப் பராமரிப்பது தான் மிகவும் முக்கியம். கூந்தல் பராமரிப்பைப் பற்றிப் பேசும் போது, மயிர் கால்களின் தரம் குறித்தும் அக்கறை கொள்வது அவசியம். முடியின் வேர்கள் ஸ்ட்ராங்காக இருந்தால் தான், முடிகளும் நன்கு அடர்த்தியாக வளரும். அதற்கு முடியின் வேர்களை நன்றாக மசாஜ் செய்து, இயற்கையான சில முறைகளில் அவற்றை நன்கு பராமரிப்பதன் மூலமே அழகான, அடர்த்தியான, நீளமான கூந்தலைப் பெற முடியும்.

பத்தே நிமிடங்களில் அழகாக ஜொலிப்பதற்கு ஒருசில யோசனைகள்

அனைவருக்குமே அழகாக எப்போதும் இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கத் தான் செய்யும். இருப்பினும் அதிக வேலைப் பளு, தூக்கமின்மை, டென்சன், சரியான சரும பராமரிப்பு இல்லாமை போன்றவற்றின் காரணமாக, அழகாக இருக்க முடியவில்லை. அதிலும் மற்ற நேரங்களில் அழகாக காணப்பட்டாலும், ஏதேனும் விழாக்கள் என்றால் அப்போது தான் முகம் பொலிவின்றி காணப்படும். அந்த நேரத்தில் அழகு நிலையங்களுக்குச் சென்று பராமரிக்க முடியாது. ஆனால் வீட்டில் இருக்கும் சிறிய அழகு நிலையமாக இருக்கும், சமையலறையிலேயே சருமத்தை அழகாக்க முடியும். அதுவும் பத்தே நிமிடங்களில் அழகாக ஜொலிப்பதற்கு ஒருசில செயல்களை செய்தால், உடனே முகம் பொலிவோடு, அழகாகவும் மின்னும்.

பட்டுப்போன்ற மென்மையான முடி வேண்டுமா?

அழகை அதிகரித்துக் காட்டும் விஷயங்களில் ஒன்று தான் முடி. இந்த முடி சிலருக்கு வறட்சியாகவும், நார் போன்றும் இருக்கும். இதனால் பலரும் தங்கள் முடியை நினைத்து கஷ்டப்படுவார்கள். மேலும் தங்கள் முடியை மென்மையாக்க கடைகளில் விற்கப்படும் ஷாம்பு மற்றும் கண்டிஷனர்களைப் பயன்படுத்துவார்கள். இருப்பினும் அந்த கண்டிஷனர்களின் சக்தி வெறும் இரண்டு நாளைக்கு தான். பிறகு என்ன மீண்டும் நார் போன்று மாறிவிடும். கெமிக்கல் பொருட்களைப் பயன்படுத்தினால், முடி தற்காலிகமாகத் தான் பலனைத் தருமே தவிர, நிரந்தர தீர்வைத் தராது.

Pages