அழகு குறிப்புகள்

முகப்பரு தழும்புகள் மற்றும் கரு‌ப்பு‌ள்‌ளிக‌ள் மறைய...

அதிக எண்ணெய் பசை இருந்தால் முகத்தில் பரு வர வாய்ப்புகள் அதிகம்.ஆகையால் எண்ணெய் பசையில்லாமல் பார்க்கவும் உடலில் சேரும் கொழுப்புச்சத்துக்களின் அலர்ஜியால் முகப்பரு ஏற்படுகிறது. மேலும். மன இறுக்கம், மலச்சிக்கல்,  உணவுமுறை மாறு பாட்டாலும் முகப்பரு தோன்றும்

முகப்பரு உள்ளவர்களுக்கு முகத்தை நன்கு சுத்தமாகக் கழுவ வேண்டும். பருக்களைக் கிள்ளவோ, அடிக்கடி கைகளால் தொடவோ கூடாது. மெல்லிய பருத்தி துணியை பயன்படுத்த வெண்டும்.

முகபரு வராம்ல் இருக்க மாலை 1 கைபிடி வேப்பிலையை 1கப் தண்ணீரில் போட்டு காலையில் முகம் கழுவினால் முகத்தில் பரு வராது,முகம் பளிச்சிடும்.

பொடுகை விரட்ட சில எளிய டிப்ஸ்

வறண்ட தலை, கிருமி பாதிப்பு, எக்ஸிமா, சோரியாஸிஸ், பங்கஸ் பாதிப்பு போன்றவை பொடுகுக்கு காரணமாக இருக்கலாம்.

இதற்காக சந்தையில் விற்கப்படும் ஷாம்புகளில் கிருமி, ஃபங்கள் நீங்கி இறந்த திசுக்களை நீக்க மருந்துகள் சேர்க்கப்பட்டிருக்கும். இந்த மருந்துகள் ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடும். பொதுவில் பொடுகினை தவிர்க்கவும், ஆரம்ப நிலையில் இருப்பதனை நீக்கவும் கீழ்க்கண்ட முறைகள் வெகுவாய் உதவும்.

மிக சிறந்த முடி பராமரிப்பாக இது அமையும். ஒரு சிறிய கப் நீரில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தடவி ஐந்து நிமிடங்களில் நீரில் தலை முடியினை அலசுங்கள். பொடுகு மறையும் வரை தினமும் இதனை செய்யலாம்.

தொப்பையை குறைக்க இலகுவான வழிகள்

இளைய தலைமுறை பெரியர்வர்கள் வரை வயிற்றை குறைக்க படும் பாடு சொல்லி தெரியவேண்டியது இல்லை. உடல் பருமன் அதிகமாக இருக்கும் பெண்கள், ஆசைப்பட்டாலும் இன்றைய டிரெண்டி உடைகளை அணிய முடியாது. தவறான உணவு பழக்கத்தால், பல பெண்களுக்கு சிறு வயதிலேயே தொப்பை மற்றும் தொடைப் பகுதிகளில் சதை போட்டு விடுகிறது. இவர்கள் ஜீன்ஸ் அணியவே முடியாது. அப்படியே போட்டுக் கொண்டாலும், தர்ம சங்கடமாகவே இருக்கும். கையில் கொழுப்பு சேர்ந்தால் ஸ்லீவ்லெஸ், குட்டைக் கை டாப்ஸ் போடுவது முடியாமல் போகும். இது போன்ற அவஸ்தை வயது வித்தியாசம் இன்றி பெண்களை பாடாய்படுத்துகிறது. கட்டுடலோடு இருக்க வேண்டும் என்றே பல பெண்கள் ஆசைப்படுகிறார்கள்.

Pages