அழகு குறிப்புகள்

ஆள் பாதி ஆடை பாதி

ஆள்பாதி ஆடை பாதி என்பதிர்கேர்ப்ப இன்றைய உலகில் ஒருவரின் வெற்றி தோல்விக்குகூட ஆடையின் பங்கு முக்கியமானதாகும். உடலம்மைப்புக்கு ஏற்ற உடை அணியவில்லையென்றால், அது அவர்களுக்கு அழகாக அமையாது. அவாறவர் உடலம்மைப்புக்கு ஏற்றவாறு உடையணிந்தால் பார்பதற்கு அழகாக இருக்கும்.

நடைமுறையில் இன்றைய பெண்கள் பேஷனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். மேலும் தங்களுக்கு ஏற்ற உடை, ஆபரணம், மற்றும் கலர் தெரிந்து கொள்வதில் மிகவும் ஆர்வமாக உள்ளார்கள். அவர்களுக்காக இதே சில டிப்ஸ்

அழகான கழுத்தைப் பெறுவது எப்படி?

நம் இலக்கியங்களில் பெண்களின் கழுத்தை பலவாறு வர்ணித்து எழுதப்பட்டுள்ளது. பார்த்தவுடன் பெண்களின் முக அழகிற்கு மேலும் அழகூட்டுவது கழுத்து என்றால் மிகையாகாது. ஒவ்வொரு பெண்ணும் தங்களின் முக அழகைச் சிரத்தையோடு பராமரிக்கும் அளவிற்கு கழுத்தினைப் பராமரிக்கக் காட்டுவதில்லை. இதனால் பல பெண்களுக்கு அழகான பளபளப்பான முகம் இருக்கும். ஆனால் கழுத்து மட்டும் கருத்தும் சுருக்கங்களோடு சொரசொரப்பானதாக இருக்கும். முகத்தை அழகாகப் பொலிவுடன் பராமரிக்க முடியும்போது கழுத்தைப் பராமரிக்க என் முடியாது.

வறண்ட சருமத்தை அழகாக பாதுகாப்பது எப்படி

நகத்தால் உடலில் மேற்பகுதியில் சொரண்டினால் வெள்ளையாக தெரிகின்றதா அப்படியென்றால் அது வறண்ட சருமத்தின் பாதிப்புதான்.  வறண்ட சருமத்தை உள்ளவர்கள் எண்ணைப் பொருட்களை அதிகமாக எடுத்துக்கொள்ளவேண்டும்.

எண்ணைப் பிசுபிசுப்பான சருமத்தை விட வறண்ட சருமத்தை பாதுகாப்பது மிக முக்கியமாகும் ஏனெனில் எண்ணைப் பிசுபிசுப்பான சருமத்தை குளிர் மற்றும் வெயில் அதிகமாக தாக்காது.  ஆனால்  வறண்ட சருமத்தின் மேல் நேரடியாக இயற்கை காரணிகளான தூசு, வெப்பம், குளிர் ஆகியவைகள் தாக்கிவிடும்.

Pages