கோலிவுட் செய்திகள்

என்னதான் நடக்குது? சரத்குமாருக்கு நாசர் கேள்வி.

சென்னை,மே 29 தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் கட்டிடம் விரைவில் கட்ட வேண்டும், இல்லையெனில் தான் சங்க தேர்தலில் போட்டியிடுவேன், என்று விஷால் புதுக்கோட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். இதனைத் தொடர்ந்து, சங்க தலைவர் சரத்குமார், விஷாலுக்கு விளக்கம் அளித்து கடிதம் ஒன்றை எழுதினர்.

இந்த நிலையில், சரத்குமாரின் கடிதத்தை படித்த நடிகர் நாசர், சரத்குமாரிடம், "என்ன நடக்கிறது சங்கத்தில்" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து நடிகர் நாசர், சரத்குமாருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

உண்மைக்கு புறம்பாக பேசுகிறார் விஷால் - சரத்குமார் அறிக்கை

நடிகர் சங்கம் தொடர்பாக புதுக்கேட்டையில் விஷால் தெரிவித்த கருத்துக்கு மறுப்பு தெரிவித்த தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தென்னிந்திய நடிகர் சங்கம் புதிய கட்டிடம் கட்டுவது குறித்து நடிகர் விஷால் ஊடகங்களுக்கு பல்வேறு தவறான கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறார். புதுக்கோட்டையிலும் தவறான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடம் கட்டுவது குறித்து சங்கத்தின் செயற்குழு, பொதுக்குழுவில் முடிவெடுத்தப்படி கட்டிடம் கட்டுவதற்கான ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டது.