கோயில்கள்

இணுவில் கந்தசுவாமி கோயில்

இலங்கை, யாழ்ப்பாணத்திலுள்ள இணுவிலில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க கோயில்களிலே இணுவில் கந்தசுவாமி கோயில் முக்கியமான ஒன்று. இது காங்கேசன்துறை வீதியின் மேற்க்கு புறமாக இணுவில் மானிப்பாய் வீதியில் (கோயில் வாசல்) அமைந்துள்ளது. உலகப்பெருமஞ்சம் அமைந்துள்ளது இவ் ஆலயத்தின் சிறப்பாகும்.

 மூர்த்தி தலம் தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமையப்பெற்ற ஆலயமாக இணுவில் மத்தியில் எழில் கொஞ்சும் இயற்கை வனப்புடன் திகழும் இணுவில் கந்தசுவாமி கோவில் காலத்தால் முற்பட்ட வரலாற்றுப் பெருமையைத் தன்னத்தே கொண்டது

 ஆலய வரலாறு

கதிர்காமம்

கதிர்காமம் இலங்கையில் மிக விசேடமான இடம். உலகின் நானாபக்கங்களிலிருந்தும் - முக்கியமாக இலங்கை - இந்தியாவிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வணங்கும் புனித தலம். இலங்கையிலே கதிர்காமம் ஓர் புனிதஸ்தலம். அங்கு அருள்பாலிக்கும் கந்தனை வழிபடச் செல்வதை கதிர்காமயாத்திரை என்பர் மூர்த்தி சிறிது ஆனால் கீர்த்தி பெரிது. கோயில் சிறிது ஆனால் மகிமை பெரிது .

Pages