இறைவழிபாடு

திருக்கோயில் கருவறைக்குள் மகளிர் நுழையலாமா?

எண்ணில் ஆகமம் இயம்பிய இறைவர்தாம் விரும்பும்
      உண்மை யாவது பூசனை எனவுரைத் தருள
      அண்ணலார் தமை அர்ச்சனை புரிய ஆதரித்தாள்
      பெண்ணின் நல்ல வளாயின பெருந்தவர்க் கொழுந்து

என்று காமாட்சியம்மை வழிபட்டதைச் சேக்கிழார் பெருமான் பாடியுள்ளார்.

மகளிர் கருவறைக்குள் சென்று வழிபட்டதைத் தலபுராணங்கள், திருமுறைகள், கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.