ஆன்மிக கட்டுரைகள்

விநாயகர் வழிபாடு

மக்கள் தொடக்க காலம் முதலே தம் சூழ்நிலைக்கேற்ப வழிபாடு செய்து வந்துள்ளனர். சிந்துவெளி, அரிக்காமேடு, ஆதிச்சநல்லூர் பையம்பள்ளி முதலியவிடங்களில் செய்த அகழ்வாய்வுகளில் வழிபாட்டுருவங்கள் பல கிடைத்துள்ளன. சங்க இலக்கியங்கள், காப்பியங்கள் ஆகியவற்றில் தெய்வ உருவங்கள், வழிபாட்டு முறைகள் ஆகியன ஆங்காங்கே இடம் பெற்றுள்ளன. நாயன்மார்கள், ஆழ்வார்கள் பாடிய பக்திப் பனுவல்களில் தெய்வ வழிபாட்டு முறை ஓரளவு செல்வாக்குப் பெற்றுள்ளது.

உருவ வழிபாடு:

ஒன்பான் இரவு (நவராத்திரி)

இயற்கையாக அமைந்தவற்றைப் பெண்ணாகக் காண்பது நம் நாட்டு மரபு. பாரதநாடு – பாரத மாதா, தமிழ்மொழி – தமிழ்த்தாய், நீலமலை – நீலமலையரசி, காஞ்சியாறு – காஞ்சிமாதேவி, காவிரி – காவிரித்தாய். இவற்றைப்போலவே வீரம் – கொற்றவை, செல்வம் – திருமகள், கல்வி – கலைமகள் எனக் கருதி வழிபாடு செய்வது மிகப்பழங்காலந்தொட்டே வழக்கில் உள்ளது. இவ்வாறு வழிபடுவதைத் தாய்த்தெய்வ வழிபாடு என்று கூறுவது வரலாற்று முறையாகும். சிந்துவெளி அகழ்வாய்வில் தாய்த்தெய்வமான கொற்றவை வழிபாடு காணப்பெறுகின்றது. “பழந்தமிழரது தலையாய தெய்வம் பெண் தெய்வமே என்பதில் ஐயமில்லை. சங்க இலக்கியங்கள் பலவற்றில் கொற்றவை வழிபாட்டு முறை கூறப்படுகின்றது.

அறுவகைச் சமயம்

மணிமேகலை, திருமந்திரம், திருமுறை முதலிய நூல்களில் குறிக்கப் பெறுகின்றது. சிவஞான முனிவர் தாம் அவற்றைச் சிவஞான மாபாடியத்தில் வரையறை செய்தார்.

புறப்புறச் சமயம், புறச்சமயம், அகப்புறச் சமயம், அகச்சமயம் எனப் பாகுபாடு செய்துள்ளார்.

புறப்புறச் சமயத்தார்:

1. உலோகாயதர்
2. மாத்திய மிகர்
3. யோகசாரர்
4. சௌந்திராந்திகர்
5. வைபாடிகர்
6. ஆருகதர் (சமணர்)

1.உலோகாயதர்:

நிலம், நீர், தீ, காற்று ஆகிய நான்கு பூதங்கள் நிலையான பொருள்கள், கடவுள், உயிர், இம்மை, மறுமை, வினைப்பயன் ஆகியன இல்லை என்னும் நாத்திகர்.

Pages