தமிழக அரசியல்

அதிமுகவில் இருந்து வெளியேறினார் ஆனந்தராஜ்- முதல் மானமுள்ள மனிதன்

சசிகலாவின் தலைமையை ஏற்க மனமில்லாத அதிமுகவினர் ஆங்காங்கே மனதுக்குள் நோந்துகொண்டு இருகின்றனர். அவர்களில் முதல் ஆளாக நடிகர் திரு.ஆனந்தராஜ் வெளியேறியுள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த ஆனந்தராஜ் அதிமுகவில் இருந்து விலகுவதாக  அறிவித்துள்ளார். அதிமுக தொண்டர்கள் விரும்பும் ஒருவர் கட்சியின் தலைமை ஏற்கவேண்டும் ஆனால் அது  சரியான பாதையில் செல்வதாக உணராததால் தான் வெளியேறுவதாக கூறியுள்ளார்.

அதிமுகவில் இருந்தபோது தனக்கு தனிப்பட்ட எதிரிகளாக இல்லாதபோதும், கருணாநிதி, விஜயகாந்த் போன்றோரை விமர்சிக்கவேண்டிய நிலை உண்டாயிற்று என்று வருத்தப்பட்டார்.

முதல்வர் ஜெயலலிதா வேட்புமனுத்தாக்கள்.

 சென்னை ஜூன் 6:

செல்வி ஜெயலலிதா மீண்டும் முதல்வரானார்.

தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றார். ஆளுநர் திரு. ரோசய்யா அவர்கள், முதல்வர் ஜெயலலிதாவிற்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். புதிய அமைச்சரவை பட்டியலை ஆளுநரிடம் முதல்வர் ஜெயலலிதா சமர்பித்தார்.  பதவியேற்பு வைபவத்தில் தமிழகத்தின் முக்கிய தலைவர்களும், திரையுலக பிரமுகர்களும் பதவியேற்பு விழாவிற்கு வந்திருந்தனர். 

Pages