தமிழக அரசியல்

கரும்பு விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால்... மு.க.ஸ்டாலின்

கரும்பு விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் தி.மு.க. போராட்டத்தில் ஈடுபடும் என்று  தமிழக எதிர்க்கட்சித் தலைவர்  மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அவர் நேற்று நெளியிட்டுள்ள அறிக்கையில்.

கரும்பு கொள்முதல் விலையை உயர்த்தாததன் பின்னணியை பார்த்தால் தன் தலைமையிலான அரசும் ‘செயல்படாத அரசு’தான் என்று ஓ.பன்னீர்செல்வம் உறுதி செய்திருக்கிறார்”

“பொங்கல் திருநாளுக்குள் கரும்பு கொள்முதல் விலையை டன் ஒன்றுக்கு 3500ரூபாயாக உயர்த்தவும், தனியார் மற்றும் அரசு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில்உள்ள நிலுவை தொகையும் வழங்கவும் நடவடிக்கை எடுக்காவிடில் தி.மு.கழகம் போராட்டத்தில் ஈடுபடும்”

நாளை பொதுக்குழு கூடவிருக்கும் நிலையில் பொன்னையன் பேட்டி

இன்று அதிமுகவை சேர்ந்த பொன்னையன் செய்தியாளர்களை சந்தித்தார் அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பின்வருமாறு விடையளித்தார்.

சசிகலா போதுசெயலாலாராக வேண்டுமென அதிமுகவை சேர்ந்தவர்கள் வலியுரிதிவருகின்றனரே அவர் ஒத்துகொண்டாரா என்ற கேள்விக்கு.

ஜெயலலிதாவோடு அவர் இணைந்து பணியாற்றி வந்ததால் அவரே அப்பொறுப்புக்கு வரவேண்டும் என்று கட்சியின் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்  சசிகலா இதுவரை எந்த பதிலும் தரவில்லை என்று கூறினார்.

சசிகலா vs சசிகலா அதிமுக அலுவலகத்தில் மோதல்

சசிகலா நடராஜனும், சசிகலா புஷ்பாவும் அதிமுக கட்சியிலிருந்து விளகிவைக்கப்படிருன்தனர், ஆனால் சசிகலா நடராஜன் பத்திரிகை வாயிலாக வைத்த கோரிக்கையை ஏற்று அவரை முதல்வர் தன்னுடன் இருக்க அனுமதித்தார். சசிகலா புஷ்பா இபோழுது அதிமுக  MP-யாக இருக்கிறார்.

இந்நிலையில் நாளை நடக்கவிருக்கும் பொதுகுழுவில் சசிகலா நடராஜன் போதுசெயலாளராக தேர்ந்தெடுக்க வாய்பிருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து சசிகலா புஷ்பாவின் தரப்பும் அவரை பொதுசெயலாளராக போட்டியிட விருப்பம் தெரிவித்து மனுகொடுக்க அதிமுக தலைமை அலுவலகத்திற்குஇன்று வந்தனர்.

Pages