இந்திய அரசியல்

கொதிப்பின் உச்சத்தில் மம்தா.

ஆயிரக்கணக்கான மூதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.10,000 கோடிக்கு அதிகமாக மோசடி செய்ததாக ரோஸ் வேலி நிறுவனத்தின் மீது எழுந்த புகாரின் அடிப்படையில் சிபிஐ இந்நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. அதேபோல் அமலாக்கத் துறையும் இந்நிறுவனம் மீது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது, மேலும்  இந்நிறுவனம் சார்ந்த குழுமத்துக்கு சொந்தமாக நாடு முழுவதிலும் உள்ள வங்கிக் கணக்குகளுக்கு அமலாக்கத்துறை சீல் வைத்து முடகியுள்ளது.

ராகுலை கழற்றிவுட்ட எதிர்கட்சிகள், சரிகட்டும் முயற்சியில் சோனியா.

ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பால் நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் இது ஊர் அறிந்த உண்மை. ஆனால், பொதுமக்களை விட சில கட்சிகளை சேர்ந்த பல ஆசியல்வாதிகள் மிக மிக கடுமையாக பாதிக்கப்பட்டுளனர் என்பதும் உண்மை. இவர்களை காப்பாற்றுவதற்காக பக்கத்து இலைக்கு பாயசம் கேட்டு குளிர்கால கூட்டததொடர் முழுவதும் முடக்கியதால்   சுமார் 300 கோடிகள் நாசமாகாபட்டது தான் மிச்சம். பாராளுமன்றகூடதொடர் முழுவதும் நடத்தவிடாமல் செய்த ராகுல் கூட்டததொடரின் இறுதி தினத்தன்று பிரதமர் மோடியை சந்தித்து சில கோரிக்கைகளை வைத்தார்.

மோடி மங்கோலிய அரசுக்கு 6500 கோடி கடன் உதவி

தற்சமயம் சீனாவிற்கு சுற்றுப் பயணம் சென்றுள்ள பிரதமர் மோடி அப்படியே மங்கோலியாவிற்கு தனது பயணத்தை நீட்டித்து கொண்டார். அங்கு சென்றுள்ள மோடிக்கு ரத்தின கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.